பதில் பிரதமராக லக்ஷ்மன் கிரியெல்ல நியமனம்

பதில் பிரதமராக லக்ஷ்மன் கிரியெல்ல நியமனம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பதில் பிரதமராக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை அடுத்து, பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவராக லக்ஷ்மன் கிரியெல்லவே இருக்கிறார். இந்த நிலையிலேயே அவர் பதில் பிரதமராக செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில், லக்ஷ்மன் கிரியெல்லவின் பெயரும் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.