இலங்கை - ஈரான் இடையிலான உறவினை வலுப்படுத்த இணக்கம்

இலங்கை - ஈரான் இடையிலான உறவினை வலுப்படுத்த இணக்கம்

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்ட உறவினை மேலும்  வலுப்படுத்த இன்று (16) செவ்வாய்க்கிழமை இணக்கம் காணப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இலங்கைக்கான புதிய ஈரான் தூதுவர் Hashem Ashjazadeh இடையிலான முக்கிய சந்திப்பொன்று அலரி மாளிகையில் இடம்பெற்ற போதே இந்த இணக்கம் காணப்பட்டது.

இந்த சந்திப்பின் போது இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

மத்திய கிழக்கு வலயத்தில் இலங்கையின் இரண்டாவது பாரிய ஏற்றுமதியாளரான ஈரான் காணப்படுகின்றது. மொத்த ஏற்றுமதியில் 90 சதவீதமானவை தேயிலையே ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு 1962ஆம் ஸ்தாபிக்கப்பட்டது. இதனையடுத்து 1975ஆம் ஆண்டு ஈரான் தூதுவராலயம் கொழும்பில் திறந்துவைக்கப்பட்ட அதேவேளை, இலங்கை தூதுவராலயம் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் 1990ஆம் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.