சட்டத்தரணிகள் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட தயாராகும் சாலிய பீரிஸ்

சட்டத்தரணிகள் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட தயாராகும் சாலிய பீரிஸ்

காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா செயற்படுகின்றார். இந்த நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய நிர்வாகத்தினை தெரிவுசெய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1992ஆம் ஆண்டு முதல் சட்டத்தரணியாக செயற்படும் இவர், சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவரான 2015ஆம் ஆண்டு முதல் 2017 வரை செயற்பட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல்வேறு உயர் பதவிகளை இவர் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.