'தீவிர முன்னறவாத மையம் உண்மையான தேசப்பற்றாளர்களுக்கான நிகழ்ச்சிநிரல்'

'தீவிர முன்னறவாத மையம் உண்மையான  தேசப்பற்றாளர்களுக்கான நிகழ்ச்சிநிரல்'

மங்கள சமரவீர
முன்னாள் அமைச்சர்

1947 ஆம் ஆண்டில் இருந்து தொடங்கிய பாராளுமன்றத்தின் தொடர்ச்சியான 16வது பாராளுமன்றத்தினைத் தெரிவுசெய்வதற்காக ஆகஸ்ட் 5ஆம் திகதி மற்றுமொரு பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுக்க நாம் தயாரா கிவருகின்ற காரணத்தினால் இலங்கையின் ஜனநாயகச் சான்றுகள் பற்றியும் ஜனநாயகத்தின் எதிர்காலம் பற்றியும் ஆழமாகச் சிந்திப்பதற்கான உகந்த தருணம் இதுவாகும் என்றால் மிகையாகாது.

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை மற்றும் மாகாண சபை முறைமை
ஆகியவற்றினைப் பாராளுமன்ற தேர்தல்களுடனும் உள்ளூராட்சித் தேர்தல்களுடனும் இணைத்து அறிமுகப்படுத்தியதில் இருந்து ஏதோவொரு தேர்தல் நடக்காத வருடமே இல்லை என்கின்ற நிலைமை உருவாகியுள்ளது.

ஒரு நாட்டின் ஜனநாயக நற்சான்றுகளை அளப்பதற்கான அளவுகோல் தேர்தல்களே என்றிருந்தால் உலகிலேயே ஜனநாயகம் தழைத்தோங்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுக்கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை.

எவ்வாறாயினும் 2019 ஆம் ஆண்டின் இகனமிஸ்ட் இண்டெலிஜன்ஸ் யுட்னிடின் ஜனநாயகச் சுட்டியில் இலங்கையின் ஜனநாயகத்திற்கு 'குறைநிறைந்த ஜனநாயகம்' என முத்திரை குத்தப்பட்டு 69வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து கடந்த பல மாதங்களாகச் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் துரித கதியில் இராணுவமயமாக்கப்பட்டு வருகின்ற காரணத்தினால் 2020ஆம் ஆண்டில் இலங்கை ஜனநாயகச் சாயம் பூசப்பட்ட சர்வாதிகாரமிக்க கலப்பு ஆட்சி முறையினைக் கொண்ட நாடாகத் தரமிறக்கப்பட்டு 'சர்வாதிகார' வகையினை நோக்கிச் சென்றால் நாம் ஆச்சரியப்பட முடியாது.

ஆயுதங்களும் யுத்தத் தாங்கிகளும் கொண்ட மனிதர்களால் இராணுவ அதிகாரத்தினையும் பலத்தினையும் பயன்படுத்தி நடத்தப்பட்ட சதிப் புரட்சிகளினால்
இருபதாம் நூற்றாண்டில் உலகில் பல ஜனநாயகங்கள் மரித்துப் போன வரலாறு நம்
கண் முன்னே இருக்கின்றது.

ஆர்ஜண்டீனாவிலும் சிலியிலும் பாகிஸ்தானிலும் தாய்லாந்திலும் கானாவிலும் ஜனநாயகங்கள் இவ்வாறுதான் மரித்துப் போயிருக்கின்றன. இன்று ஜனநாயகங்கள் இராணுவ ஜெனரல்களால் கொல்லப்படாமல் தேர்தல்களினால் தேர்வுசெய்யப்படும் தலைவர்களினாலேயே கொல்லப்படலாம் எனும் நிலை காணப்படுகின்றது.

இவர்கள் தங்களைப் பதவியில் அமர்த்திய செயன்முறையினையே தலைகீழாகப் புரட்டிவிடுகின்றனர். உண்மையில் பல ஜனநாயகங்கள் கண்ணுக்குப் புலப்படாத நடவடிக்கைகளினால் படிப்படியாகச் சிதைக்கப்பட்டு வருகின்றன.

ஜனநாயகத்தின் பின்னோக்கிய சறுக்கல் வாக்குப்பொட்டியிலேயே ஆரம்பிக்கின்றது. ஜனநாயகக் கொலைகாரர்கள் ஜனநாயகத்தினைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு ஜனநாயகத்தினைக் கொல்வதற்கு ஜனநாயகத்தின் ஆணிவேறான நிறுவனங்களையே படிப்படியாகவும் மறைமுகமாகவும் சட்டபூர்வமாகவும் கூடப் பயன்படுத்துகின்றனர் என்பதே சர்வாதிகாரத்திற்கான தேர்தல் வழியின் முரண் போலியாகும்.

1970களில் இருந்தே இலங்கையின் ஜனநாயக நிறுவனங்கள் சர்வாதிகாரப் போக்குக் கொண்ட தலைவர்களினால் பாரதூரமான அத்துமீறல்களுக்கு ஆளாகி வருகின்றன. குறிப்பாக 1978 இல் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நவீன ஜனநாயகத்திற்கு
இன்றியமையாததான பரிசலிப்புக்கள் மற்றும் சமன் செய்தல்கள் குரூரமாகச்
சூழ்ச்சித்திறனுடன் பயன்படுத்தப்பட ;டுக் கீழறுக்கப்பட ;டு வருகின்றன. 19 வது
திருத்தத்தின் கீழ் உயிர்ப்பிக்கப்பட ;ட அரசியலமைப்புச் சபை தற்போது கிட்டத்தட்ட
பக்கவாத நிலையினை அடைந்துவிட்டது. மேலும் நிறைவேற்று அதிகாரம்,
சட்டவாக்கம் மற்றும் நீதிமுறைமை ஆகியவற்றுக்கு இடையிலான பிரிப்பும் அதிகரித்த
அளவில் மங்கலாகி வருகின்றது. சுயாதீன ஆணைக்குழுக்கள் தனது ஆளுகைப்
பாங ;கிற்குப் பெரும் தொந்தரவுமிக்கவையாக இருக்கின்றன என ஜனாதிபதி
பகிரங்கமாகப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன் 19 வது திருத்தத்தினை மீண்டும் சுருட்டி
வைப்பதற்கான ஆணையினையும் கோரி வருகின்றார்.
பல்லினங்களும் பல்சமயங்களும் நிறைந்த பன்மொழிச ; சமூகங்களைக் கொண்ட
இலங்கையில் சட்டம் தெரிவுசெய்யப்பட்டோர் மீது மாத்திரமே பிரயோகிக்கப்பட ;டு
வருவதுடன் இனவாதமும் வெறுப்புப் பேச்சுக்களும் இன அடிப்படைவாதமும் சமய
அடிப்படைவாதமும் கட்டின்றித் தர்பார் நடத்திவருகின்றன. பேச்சுச் சுதந்திரமும்
கருத்து வெளிப்பாட்டிற்கான சுதந்திரமும் பறிக்கப்படுவதே நாளாந்த ஒழுங்காக
மாறியுள்ளது. இவையெல்லாம் இலங்கையில் ஜனநாயகத்தில் மேலதிக
அழுத்தத்தினை ஏற்படுத்திவருகின்றன. ஒரு தேசம் என்கின்ற ரீதியில ; இலங்கை
அதன் பன்மைத்தன்மையினைக் கொண்டாட முடியாத இயலாமையும் அனைத்துப்
பிரசைகளினதும் உரிமைகளைப் பற்றிப்பிடிக்க முடியாத இயலாமையுமே
இலங்கையின் நிலைபேறான முன்னேற ;றத்தினையும் அபிவிருத்தியினையும் தடுத்து
நிறுத்தும் முக்கி;யமான தனித்த காரணியாக விளங்குகின்றது. இன்று பேரினவாதமும்
குறுகியவெறி கொண்ட நாட்டுப் பற்றும் தேசியவாதமாக வேசம் பூண்டு அதுவே அரச
கொள்கையாகவும் மாறியுள்ளது.
சுதந்திரம் கிடைத்தது முதல் தடையின்றி அதிகரித்துவந்த ஊழல் தற்போது எமது
சமூகத்தின் கட்டுமானத்தினையே அரித்துத் திண்னும் புற்றுநோயாக மாறியுள ;ளது.
இயங்குதிறன்மிக்க சந்தைப் பொருளாதாரத்திற்கு அவசியமான மறுச Pரமைப்புக்களும்
ஒழுங்குவிதிகளும் சமமான வாய்ப்புக்கான தளங்களும் இன்றி 1977 இல்
பொருளாதாரத்தினைத் திறந்துவிட ;டமையானது அரசியல ; வகுப்பாருக்கும் வியாபார
வகுப்பாருக்கும் இடையிலான கள்ள உறவினை அடிப்படையாகக் கொண்ட
முதல்வாதத்தின் அபாய வடிவத்திற்கு வழிகோலியுள்ளது. சுருங்கக் கூறுவதாயின்
ஊழல் மற்றும் மீண்டெழும் எதேச ;சாதிகாரம் ஆகியவற்றின் விளைவாக சிவில்,
அரசியல் மற்றும் மனித உரிமைகளில ; ஏற்பட ;டுள்ள தாக்கம் இலங்கையின்
ஒட்டுமொத்தப் பிரசைகளிலும் தாக்கத்தினை ஏற்படுத்தி, நிறைவேற்று அதிகாரம்,
இராணுவம் மற்றும் சமயக் குறவர் ஆகியோரின் கெடுநோக்குமிக்க கூட்டுடன் நாடு
இன்று சர்வாதிகார அரசு எனும் நிலையினை நோக்கியதான ஒரு பயங்கரச்
சறுக்கலிக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கின்றது. உண்மையில், பௌத்த
குறவர்களில் சிலராலும் ஏனைய சிங்களப் பேரினவாதக் குழுக்களைச் சேர்ந்த
சிலராலும் இலங்கைக்கான புதிய ஒரு பேரினவாத 'அரசியலமைப்பின்' வரைபு
தயாரிக்கப்பட்டு முன்னெடுக ;கப்பட ;டு ஏற்கனவே ஜனாதிபதியிடம்
கையளிக்கப்பட ;டுள்ளது. இது பாராளுமன்றத்திற்கு வெளியே
அங்கீகரிக்கப்படவேண்டும் என்று அரசுக்கு ஆதரவான ஊடகங்கள் பெரும்
ஆரவாரங்களைக் கிளப்பின. முன்னுதாரணம் இன்றி, கோதபாயவின் ஜனாதிபதி
ஆட்சிக்கு ஆகஸ்ட் 5 இல் உறுதியான ஆணை வழங்கப்பட்டால் ஜனநாயக முலாம்
பூசப்பட ;ட நீடித்த இராணுவச் சர்வாதிகாரம் எனும் படுகுழுpக்கே அது நாட்டினை
இழுத்துச் செல்லும். முன்னெப்பொழுதும் இல்லாத பொருளாதார நெருக்கடி எம்மைத்
தாக்குவதற்குத் தயாராக இருக்கும் நிலையில் அதிகரித்துவரும் வேலையில்லாப்
பிரச்சினைக்கு மத்தியில ; அடக்குமுறையும் எதேச்சாதிகாரமும் ராஜபக்சவின்
மனதுக்கு விருப்பமான தெரிவாக இருக்கமுடியும். 'ஆசியாவின் பழமையான
ஜனநாயகம்' எனப் பொதுவாக வர்ணிக்கப்படும் ஒரு நாட்டிற்கு இது பேரழிவு
ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.
அதலபாதாளத்தின் விளிம்பில ; நின்றுகொண்டு பாதாளத்தினை இலங்கையர்கள்
பார்த்துக்கொண்டு இருக்கின்ற காரணத்தினால் இது அனைத்து இலங்கையர்களுக்கும்
வாழ்வா சாவா என்கின்ற இருப்பியல் பிரச்சினைக்குரிய கனமாக மாறியுள்ளது;
ஒவ்வொரு இலங்கையரும் அர்த்தபூர்வமான தெரிவினை எடுக்கவேண்டும். அவ்வாறு
எடுக்கின்ற முடிவே இனி வரப்போகும் பல தலைமுறைகளின் எதிர்காலத்தினைத்
தீர்மானிக்கும். எமது அச்சங ;கள் மற்றும் பக்கச் சார்புகளின் அடிப்படையில் நாம ;
எமது நாட்டிற்கான ஒரு புதிய எதிர்காலத்தினை வரைவிலக்கணம்
செய்யப்போகின்றோமா அல்லது எம் அனைவருக்குமான சிறந்த இலங்கைக்காக
எமது எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாiஷகளின் அடிப்படையில் ஒரு புதிய
எதிர்காலத்தினை வரைவிலக்கணம் செய்யப்போகின்றோமா? எமது எதிர்காலத்தினை
வரைவிலக்கணம் செய்வதற ;காக உணர்வுகளைக் கொந்தளிக்க வைக்கும்
விடயங்களை ஊதிப்பெருதாக்கும் ஊடகங்களைத் தமது ஏகபோக அதிகாரத்தின் கீழ்
வைத்திருக்கும் அற்பத் தொகையினரான இனவாதமும் மதவாதமும் தலைக்கேறிய
உயரவாப் பித்துப் பிடித்தோரும் அடிப்படைவாதப் பித்தர்களும் எமது
எதிர்காலத்தினைத் தீர்மானிக்க நாம் அனுமதித்துவிட்டு சகிப்புத்தன்மையும்
மிதவாதமும் என்றோ கடந்து போன நாகரிக யுகத்தின் புராதன விழுமியங்களாக
மாறிவிட ;டனவோ என மௌனத்தில் திகைத்திருக்கப்போகின்றோமா? தீவிரவாதத ;தின்
உரத்த வன்முறை ஒலிகள் மௌனமான பெரும்பான்மையினரின் ஜனநாயகப்
பிரகடனங்களை விடச் சிறந்த செய்திகளைப் பிரசவித்துக்கொண்டிருக்கின்றன.
தீவிரவாதம், சகிப்புத்தன்மையின்மை, வெறுப்பு மற்றும் பெருங்கூச்சலிடும் சிலரின்
போலியான தேசப்பற்று ஆகியவற்றின் முன், சுதந்திரத்தில் இருந்து பெரும்பான்மை
காத்து வரும் மௌனம் இன்று நாம் தேசம் என்கின்ற ரீதியில ; முகங்கொடுக்கும்
பாரிய நெருக்கடியாக வடிவெடுத்திருக்கின்றது. இன்று நாம் முகங்கொடுக்கும்
நெருக்கடிக்கான மூல காரணங்கள் பொருளாதார, சமய அல்லது சமூக அரசியல்
தன்மையினைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இலங்கை போன்ற வளர்முக
நாட்டின ; சவால்களை எதிர்கொள்ளத் தேவையான விழுமியங்களையும் அறிவினையும்
அனுபவத்தினையும் திறனாய்வுமிகு சிந்தனையினையும் பகுப்பாய்வுமிக்க
சிந்தனையினையும் வழங ;குவதற்குத் தவறிய கல்வி முறைமையும் இதற்கான
காரணங்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது.
வரம்புகளற்ற துருவமயமாதலையும் அரச அனுசரணையுடனான அரசியல்
குழப்பத்தினையும் நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கையில ; தாராளவாத
விழுமியங்களின் வீரியமான வலியுறுத்தலே காலத்தின் தேவையாக இருக்கின்றது;
ஒரு தீவிர முன்னறவாத மையம். இந்த மையம் தாராளவாத மற்றும் மையவாத
விழுமியங்களுக்கான முன்னறவாதக் கடப்பாட ;டிற்கான மையமாக இருக்கவேண்டும்.
கௌதம புத்தரின் நடுநிலைப் பாதையில் இருந்தும் மஹாத்மா காந்தியின்
அஹிம்சைப் பாதையில ; இருந்தும் நேருவில ; இருந்தும் மார்டின ; லூதர் கிங்கில ;
இருந்தும் நெல்சன ; மண்டேலாவில் இருந்தும் பரக் ஒபாமாவில் இருந்தும் பெறும்
விழுமிய முறைமைகளை உயிரூட ;டுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய
அரசியல் கலாசாரத்தினை உருவாக்குவதே இப்போதைய தேவையாகும்.
1977 இல் சந்தைப் பொருளாதாரத்தினை வரித்துக ;கொண்ட முதல் நாடுகளில ;
ஒன்றாக இருந்ததையும் தாண்டி, இலங்கை இன்னும் புராதன சட்டவாக்கங்களினாலும்
சமவுடைமைவாத மனப்பாங்குகளினாலும் புதையுண்டுள ;ள ஒரு கட ;டளைப்
பொருளாதாரமாகவே காணப்படுகின்றது. இந்த அரசாங்கத்தினால்
நடைமுறைப்படுத்தப்படும் அரசியல்வாதிகளுக்கும் வியாபாரிகளுக்கும் இடயிலான
கள்ள வலையமைப்பை அடிப்படையாகக் கொண்ட முதல்வாதம் வறியவர்களையும்
பலவீனமானவர்களையும் வாய்ப்புக் கிட்டாதவர்களையும் பாதுகாப்பதற்கான
உள்ளடக்கும் தன ;மைமிக்க சமூகப் பாதுகாப்பு வலை மீதான வலியுறுத்தலுடன்
பராமரிப்பு மிக்கதும் இயங்குதிறன் மிக்கதுமான சமூக சந்தைப் பொருளாதாரத்தினால்
பதில Pடு செய்யப்படவேண்டும். அனைவருக்கும் சமமான வாய்ப்புக்கள் கிடைப்பதை
உறுதிப்படுத்தும், அனைவரையும் உள்ளடக்கும் அரசறிவுத ;துறை தேவைப்படுவதுடன்
அரசியல் அனுசரணை வழங்கும் கலாசாரம் முடிவுக்கு வரவேண்டும். நாகரீகமான
சமூகத்திற்கு சட்டத்தின் ஆட்சியே அவசியமான முன் தேவைப்பாடகும். இதில்
யாரும், மன்னராயினும் துறவியாயினும் படைவீரராயினும், எவரும் சட்டத்திற்கு
அப்பாற்பட்டவர்களல்ல. முதலீட்டாளர்களின் நம்பிக்கையினை வெல ;வதற்கும் எமது
தேசத்தினை அபிவிருத்தி செய்ய அர்த்தபூர்வமாகப் பங்குபற்றுவதற்காக எமது
சொந்தப் பிரசைகளின் நம்பிக்கையினை வெல்வதற்கும் இது அவசியமாகும். இதுவே
இலங்கை அர்த்தபூர்வமான அபிவிருத்தியை அடைவதற்கு அவசியமானதாகும்.
முன்னெப்பொழுதுமே கண்டிராத அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியினை
நோக்கி இலங்கை நகர்ந்துகொண்டிருக்கையில் எதிர்ப்புமிக்க வலதுசாரி அரசியல்
மற்றும் இடதுசாரி அரசியலுக்கு அப்பால் நோக்குகின்ற கருத்தொருமிப்புமிக்க
ஜனநாயகத்தின் உயிர்ப்பிப்பே அவசியத் தேவையாக இருக்கின்றது. கிறிஸ்துவுக்கு
முன்னர் 350 இல் அரிஸ்டோட்டல் எழுதிய 'அரசியல ;' எனும் நூலில், அவருக்கு
நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கௌதம சித்தார்த்தரின் கருத்தினை
எதிரொலித்து செல்வந்தருக்கும் வறியோருக்கும் இடையிலான உட ;பிரிவினை
இணைப்பதற்கான வழியாக 'இடைநிலைச் சக்தி' பற்றிக ; கூறியிருக்கின்றார். இன்று
நெருக்கடிக்கு மேல் நெருக்கடிக்கு இலங ;கை முகங்கொடுத்துக ;கொண்டிருக்கையில்
'இடைநிலைச் சக்தி' எனும் அணுகுமுறையே எமக்கான மாற்றீடாக இருக்க முடியும்.
இடைநிலைப் பாதை என்பது பலவீனமானவர்களின் தத்துவம் என்றும் அது
வலுவற்றது என்றும் நினைப்பவர்கள ; எம்மில் உள்ளனர். அதேபோன்று சட்டத்தின்
ஆட்சி பொருத்தமற்றதாக இருக்கும் சூழ்நிலையில் எல ;லாம் சரிதான் என்ற
மனப்பாங்குடன் எந்த ஒரு சூழ்நிலைக்கும் போலியான தாராளவாதிகள்
நியாயப்படுத்தல்களையும் காரணங்களையும் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள்.
உண்மையில் தாராளவாதத்தினையும் விடயங்கள் தானாகவே நடக்கும், அரசாங்கம்
தலையிடத் தேவையில ;லை என்னும் தனிநபர் சுதந்திரத்தினை ஆதரிக்கும்
கொள்கையினையும் பலர் குழப்பிக்கொள்கின்றனர். இடைநிலைப் பாதை அல்லது
'தீவிர முன்னறவாத மையம்' என்பது ஜனநாயகக் கோட்பாட ;டினையும ;
சுதந்திரத்தினையும் சமத்துவத்தினையும் நீதியினையும் நீதியானதும்
பராமரிப்புமிக்கதும் மறுமலர்ச்சிமிக்கதுமான சமூகத்தின் நான்கு தூண்களாகக்
கொண்டுள ;ளது. தீவிர முன்னறவாத மையம் விதிகளில் முரண்பாடு எனப் பலர ;
கூறினாலும், இந்த விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் அடைவதற்கும், தேவைப்படின்
அஹிம்சைப் போராட்டத்தினை நடத்துவதற்கும ;கூட ஒருவரின் திடசங்கற்பத்தின்
துணிச்சலுடன் சேர்த்து தாராளவாத ஜனநாயகக் கோட்பாடுகளுக்கான தீவிர
முன்னறவாத மீள்கடப்பாடு அவசியமான தேவையாகும். தீவிர முன்னறவாத மையம்
மிதவாதத்திற்கான தளமாகும். இது மௌனமான பெரும்பான்மை
சர்வாதிகாரத்தினையும் இனவாதத்தினையும் தீவிரவாதத ;தின் ஏனைய அனைத்து
வடிவங்களையும் முனைப்புடனும் தீரத்துடனும் எதிர்ப்பதற ;கான தளத்தினை
வழங ;குகின்றது.
பன்முகப்படுத்தப்பட்ட ஆளுகையின் ஜனநாயகச் சட்டகத்தினுள் அரசியல் வீச ;சின்
ஒவ்வொரு பகுதியில் இருந்தும் வரும் மாறுபடும் கருத்துக்கள் மற்றும்
அபிப்பிராயங்கள ; தமக்கென ஓரிடத்தினைக் கொண்டிருக்கக்கூடிய ஒரு மையவாத
இடைப் பாதையின் உருவாக்கத்தினைத் தீவிர முன்னறவாத மையம்
சம்பந்தப்படுத்துகின்றது. இதில் பல்வகைமை அதன் சகல வெளிப்பாடுகளிலும்
கொண்டாடப்படுகின்றது; பல்வேறு சமுதாயங்களின் மத்தியில் பல வருடங்களாக
நிலவிவரும் அவநம்பிக்கை, அஹிம்சை மற்றும் ஜனநாயகச் சட்டகத்தினில் அதன்
இயல்பை இழக்கவேண்டும். இங ;கேயே பன்மைவாதமும் உலகாயுதமும்
தழைக்கின்றது. சகிப்புத்தன்மையற்றவர்கள் யார் மீது வெறுப்பினைக்
காட்டுகின்றார்களோ அவர்கள் உண்மையில் தங்களைப் போன்றவர்களே என்பதையும்
தங்களுக்குள ;ளதைப் போன்ற அதே கனவுகளையும் அபிலாiஷகளையும் அவர்கள்
கொண்டுள ;ளனர் என்பதையும் மனிதர்கள் என்ற ரீதியில ; தங்களுக்குள்ளதைப் போன்ற
அதே அச்சத்தினையும் கரிசனைகளையும் கொண்டுள ;ளனர் என்பதையும் தீவிர
முன்னறவாத மையம் காட்டவேண்டும். அனைத்து இலங்கையர்களும் சாதி, இனம்
மற்றும் வகுப்பு என்பவற்றின் எல்லைகளுக்கு அப்பால் சென்று தங்களின் பொதுவான
மானுடத்தினைக் கண்டுபிடிக்கும் ஓரிடமாக மையம் விளங்கவேண்டும்.
பல தசாப்தங்களாக நிலவிவந்த மோசமான ஆளுகை மற்றும் தவறான
முகாமைத்துவம் காரணமாக கோதபாய ராஜபக்சவோ அல்லது இலங்கை பொதுஜன
பெரமுனவோ அல்லது பிளவுண்டுள்ள எதிர்க்கட்சியோ ஜனநாயக நெருக்கடியினையும்
ஆளுகை நெருக்கடியினையும் தீர்ப்பதற்கான தொலைநோக்கு அற்றவர்களாக
இருக்கின்ற காரணத்தினால் ஆகஸ்ட் 5 ஆம் திகதிய தேர்தலின் முடிவுகள்
கருத்திற்கொள்ளப்படத் தேவையற்றதாகும். அரசியல் சந்தர்ப்பவாதம் மற்றும்
தீவிரவாத சக்திகளினால் நலச்சிறப்புக்கள் எல ;லை வரம்பிற்கு நகர்த்தப்படும்
ஜனநாயகத்தினைக் காப்பாற்ற உள்ள ஒரே சாத்தியமான பாதை மையவாத
விழுமியங்களுக்குத் திரும்புதலாகும். இதற்கான மாற்றீடு ஜனாதிபதி பூடகமாகக்
குறிப்பிட ;டது போல நிறைவேற்று அதிகாரமும் இராணுவமும் சமயக் குறவர்களும்
கூட ;டுச்சேர்வதை அடிப்படையாகக் கொண்ட சர்வாதிகாரம் அல்ல அல்லது பிரதமர்
கோரிவருவது போன்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் அல்ல. 1970 களிலும்
1977 இலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெற்றுக்கொண்ட அனைத்து
அரசாங்கங்களும் 2010 இல் இலஞ்சத்தினால் தூண்டப்பட்ட மூன்றில் இரண்டு
பெரும்பான்மையும் இன்று நாம் கண்ணால் காண்கின்ற ஆளுகையின் அழிவிற்கே
பங்களிப்பு வழங ;கியுள்ளன.
ஜனநாயகத்திற்கான அவசரமான மீள்கடப்பாடே காலத்தின் தேவையாகும். 21 ஆம்
நூற்றாண்டின் இரண்டாம் கால்பகுதியினை நோக்கி நாம் நகர்கையில் ஜனநாயகம்
கொண்டுள ;ள அனைத்துக் குறைகளையும் தவறுகளையும் தாண்டி அதுவே
தொடர்ந்தும் ஆளுகையின் மிகச் சிறந்த முறைமையாக இருக்கின்றது. கிரமமான
தேர்தல்களை நடத்துவதன் மூலம் நாம் ஜனநாயகத்திற்கு உதட ;டளவுச்
சேவையினையே ஆற்றிவருகின்றோம். ஆனால் அனேகமாக அனைத்து ஜனநாயக
நிறுவனங்களும் அதற்கவசியமான பரிசீலனைகள் மற்றும் சமன்செய்தல்களுடன்
கடந்த காலங்களில் மிக மோசமாகக் கீழறுக்கப்பட ;டுள்ளன. இவ்வாறான
நிறுவனங்களை வலுப்படுத்த 2015 இல ; எடுக்கப்பட ;ட சொற்பமான
நடவடிக்கைகளையும் பொதுஜன பெரமுன பாரிய பெரும்பான்மையினைத் தேர்தலில்
பெற்றால் வாபஸ்பெறப்படுவதற ;கே திட்டமிடப்பட்டு வருகின்றன.
நேரிய சிந்தனை கொண்ட அனைத்து இலங ;கையர்களும் தங்களின் நீண்ட
மௌனத்தினைக் கலைத்து ஜனநாயகத்தினைப் பாதுகாக்க ஒன்றினைய வேண்டும்.
உண்மையான தேசப் பற்றாளர்களான மௌனமான பெரும்பான்மையினர் பொறுத்தது
போதும் என்று தங ;களின் நீள்துயிலில் இருந்து விழிக்கும்போதே ஒரு சிலரின்
கொடுங்கோண்மையினை தோற்கடிக்க முடியும். சாமுவேல் ஜான்சன் குறிப்பிட ;டதைப்
போல ;, கயவர்களின் இறுதிப் புகலிடம் தேசப்பற்று என்பது இலங்கையில் இப்போது
உண்மையாகியுள்ளது. இன்று ஊக்குவிக்கப்படுகின்ற தேசப்பற்று போலித்திரை
போர்த்திய இனவாதமும் மிகைப்பற்றுமிக்க ஆதிக்கவாதமுமாகும். இதுவே சுதந்திரம்
கிடைத்தது முதல் எமது சரிவிற்கான பிரதான காரணமாகும்.
நிலவுடைமை மற்றும் கோத்திர மனப்பாங ;கினை நிராகரித்து, 56 இற்குப் பின்னரான
சிறு கிணற்றில் பெரிய தவளை மனப்பாங்கினையும் நிராகரித்து, நவீன இலங ;கையின்

இலக்குகளையும் அபிலாஷைகளையும் பிரதிபலிப்பதற்கு தேசப்பற்று மீள் வரைவிலக்கணப்படுத்தப்பட வேண்டும். எமது புராதன கலாசாரங்கள் மற்றும்  சமயங்களின் பல்வகைமையினையும் மகிமையினையும் கொண்டாடுகின்ற
அதேவேளை இலங்கையின் உண்மையான தேசப்பற்றாளர்கள் - தேசியவாத மற்றும்
பெருநகர – சுதந்திரம், மகிழ்ச்சி, மறுமலர்ச்சி ஆகியவற்றினை நோக்கி உலகின்
ஏனையோருடன் சேர்ந்து கைகோரத்துப் பயணிக்கவேண்டும்