இந்திய உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொட நியமனம்

இந்திய உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொட நியமனம்

இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொட நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை, சென்னைக்கான இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகராக கலாநிதி வீ.கே.வால்சன் நியமிக்கப்படவுள்ளதாக குறித்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவுடனா உறவினை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நியமனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்த்ககது.

2001ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட மிலிந்த மொரகொட, பல்வேறு அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.

இறுதியாக கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்ட இவர், இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.