பெண்களின் நல்வாழ்வு தொடர்பான ஆய்வு வெளியீடு

பெண்களின் நல்வாழ்வு தொடர்பான ஆய்வு வெளியீடு

இலங்கையில்  ஐந்து பெண்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் இல்லறவாழ்க்கைத் துணையினால் உடல் மற்றும் பாலியல் வன்முறைகளை அனுபவித்ததாக ஆய்வு கண்டறிந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில், சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான முதலாவது தேசிய கணக்கெடுப்பை நடத்தியது.

மகளிர் நல்வாழ்வு கணக்கெடுப்பு (WWS) என அழைக்கப்படும். இதில் இலங்கையின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 2,200ற்கும் மேற்பட்ட பெண்களிடம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில், ஐந்து பெண்களில் ஒருவர் (20.4%) தங்கள் வாழ்நாளில் இல்லறவாழ்க்கைத் துணையினால் உடல் மற்றும் பாலியல் வன்முறைகளை அனுபவித்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையால் வன்முறைக்குட்படுத்தப்பட்டு வாழும்போது பெண்களின் சமாளிக்கும் உத்திகளை பகுப்பாய்வு செய்ததில், வாழ்க்கைத் துணையினால் பாலியல் வன்முறையை அனுபவித்த பெண்களில் கிட்டத்தட்ட பாதி  (49.3%) பேர் அவமானம், சங்கடம் மற்றும் தாம் குற்றஞ்சாட்டப்படுவோம் அல்லது நம்பப்படாமை தொடர்பான பயம், மற்றும்  வன்முறை சாதாரணமானது அல்லது உதவி தேடும் அளவுக்கு தீவிரமானது அல்ல என்று நினைப்பதனால் எங்கும் முறையான உதவியை நாடவில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பெண்களின் நல்வாழ்வு தொடர்பான ஆய்வுக்கு கனடா அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் தொழில்நுட்ப ரீதியாக ஆதரவளித்தது.

வாழ்க்கைதுணையின் மூலம் ஏற்படும் வன்முறை எவ்வடிவத்தில் காணப்பட்டாலும், அது பெண்களுடைய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் கொவிட் 19 போன்ற பெருந்தொற்று போன்ற நெருக்கடி நிலைமைகளின் மூலம் ஏற்படும் சமூக பொருளாதார நிலைமைகளிலிருந்து மீளௌல் போன்றவற்றுடன் ஒன்றிணைந்து காணப்படுகின்றது.

ஆகவே ஆய்வின் மூலம் கண்டறிந்த ஏனைய விடயங்களை பகிர்ந்துக் கொள்வதற்காக அரசாங்கத்தின் முக்கிய பங்காளர்கள் மற்றும் அபிவிருந்தி பங்காளர்களுடன் எதிர் வரும் மாதங்களில் தொடர் கலந்தாய்வு பயிற்சி பட்டறைகளை; நடாத்த நாம் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் திறனான முடிவெடுத்தல் உறுதி செய்யப்படுவதுடன் இச் செயற்பாட்டில் அனைவரையும் உள்வாங்கும் நிலைமையும் உருவாகும்.

முழு அறிக்கையையும் பெற்றுக் கொள்ள,  http://www.statistics.gov.lk/  ஐப் பார்வையிடவும்.