எரிபொருள் விலை அதிகரிப்பு: தீர்மானத்தினை . வாபஸ் பெறுமாறு சஜித் கோரிக்கை

எரிபொருள் விலை அதிகரிப்பு: தீர்மானத்தினை . வாபஸ் பெறுமாறு சஜித் கோரிக்கை

எரிபொருட்களின் விலையினை அதிகரிக்கும் தீர்மானத்தினை உடனடியாக வாஸ் பெறுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"எரிபொருள் விலையை அதன் வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான மற்றும் துன்புறுத்தும் முறையில் உயர்த்துவதற்கான முடிவை அரசாங்கம் எடுத்துள்ளது, இந்த முடிவால் ஏற்கனவே நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அத்தகைய தீர்வை எடுத்தவர் யார் என்று தெரியாத அளவிற்கு அரசாங்கமும் நகைச்சுவையாக மாறியுள்ளது. கூட்டாக சம்பந்தப்பட்ட முடிவை எடுத்ததன் பிற்பாடு அவ்வாறு இல்லை எனக் கூறி, பின்னர் ஒரு நபரை இலக்கு வைக்க அரசாங்கத்தின் முக்கிய தரப்பு செயல்படுகிறது.

இறுதியில், அவர்களின் உள்ளக அதிகார போராட்டத்தின் காரணமாக ஹிலட்டினுக்குச் செல்வது அப்பாவி மக்களே, அரசாங்கத்தில் யாரும் இல்லை என்பதைக் கூறுகிறேன்

அரசாங்கம் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதால் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. அரசாங்கத்தின் அதிகாரப் போராட்டம் அரசாங்கத்தாலயே தீர்க்கப்பட வேண்டும், மக்கள் அந்த போராட்டத்திற்கு பலியாகும் வரை காத்திருக்க நாங்கள் தயாராக இல்லை.

எனவே, எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தன்னிச்சையான மற்றும் பொறுப்பற்ற முடிவை உடனடியாக மாற்றியமைக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

அதை அவ்வாறு செய்யாமல், வெறும் ஊடக விளம்பரங்களால் மக்கள் பயனடைய மாட்டார்கள் என்பதையும், இரண்டு ஆண்டுகளாக மக்கள் இத்தகைய சிறுபிள்ளைத்தனமான மற்றும் சில்லறை நகைச்சுவைகளை அனுபவித்ததையும் நாங்கள் அரசாங்கத்திற்கு நினைவுபடுத்துகிறோம்.

எனவே, கொரோனாவின் அழுத்தத்தின் கீழ் மக்கள் அவதிப்பட்டு, ஒரு வேளை விட்டு பிரிதொரு வேளை சாப்பிடும் மக்கள் இருக்கும் ஒரு நாட்டில், ஆட்சி அதிகாரம் மற்றும் பொறுப்பற்ற தன்மை ஆகியவற்றில் அரசாங்கம் எடுத்த தன்னிச்சையான முடிவை எத்தகைய யேசிப்புகளும் இன்றி உடனடியாக மாற்றியமைத்து எண்ணெய் விலையை உடனடியாக குறைக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.