காதர் மஸ்தானுக்கு கொவிட் - 19 தொற்று

காதர் மஸ்தானுக்கு கொவிட் - 19 தொற்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை சந்திப்பதற்காக அவர் அலரி மாளிகைக்கு இன்று (09) புதன்கிழமை சென்றுள்ளார். இதன்போது அவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, கொவிட் - 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாளை இவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.