புதிய பாராளுமன்றம் வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்குக் கூடும்

புதிய பாராளுமன்றம் வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்குக் கூடும்

புதிய பாராளுமன்றம் எதிர்வரும்  ஓகஸ்ட் 20ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணிக்குக் கூடும் என அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

ஓகஸ்ட் 20ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதிதித் தவிசாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர். அதனைத் தொடர்ந்து அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபாநாயகர் முன்னிலையில் பதவிச் சத்தியம் செய்துகொள்வார்கள்.