ஐ.தே.க மத்திய கொழும்பு பிரதம அமைப்பாளராக பைரூஸ் ஹாஜி நியமனம்

ஐ.தே.க மத்திய கொழும்பு பிரதம அமைப்பாளராக பைரூஸ் ஹாஜி நியமனம்

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதிக்கான பிரதம அமைப்பாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினரான பைரூஸ் ஹாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று (22) புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

இதன்போது கட்சியின் உப தலைவரும், கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கலந்துகொண்டார்.

1984ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொண்ட பைரூஸ் ஹாஜி, மேல் மாகாண சபை ஆகியவற்றின் உறுப்பினராக சுமார் 15 வருடங்கள் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.