28 அமைச்சுக்களுக்கு 26 அமைச்சர்கள் நியமனம் (முழு விபரம்)

28 அமைச்சுக்களுக்கு 26 அமைச்சர்கள் நியமனம் (முழு விபரம்)

28 அமைச்சுக்களைக் கொண்ட புதிய அமைச்சரவைக்கான 26 அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினல் இன்று (12) புதன்கிழமை நியமிக்கப்பட்டனர்.

கண்டி - மங்குல் மடுவவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 26 அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் மூன்று அமைச்சுக்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமனம்:

1. பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

2. நிதி - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

3. புத்தசாசனம்,மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் -பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

4. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்  -  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

5. தொழில் அமைச்சர் - நிமால் சிறிபாலடி சில்வா

6. கல்வியமைச்சர்  - ஜி.எல்.பீரிஸ்

7. சுகாதார அமைச்சர் - பவித்திராதேவி வன்னியாராச்சி

8. வெளிவிவகார  அமைச்சர்  - தினேஷ் குணவர்தன

9. கடற்றொழில்  அமைச்சர் - டக்லஸ் தேவானந்தா

10. போக்குவரத்து அமைச்சர் - காமினி லொக்குகே

11. வர்த்தக அமைச்சர் - பந்துல குணவர்தன

12. வனஜீவராசிகள் - சி.பி.ரட்நாயக்க

13. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி - ஜனக்க பண்டார தென்னகோன்

14. வெகுசன ஊடக அமைச்சர்  - கெஹலிய ரம்புக்வெல்ல

15. நீர்பாசனதுறை அமைச்சர் - சமல் ராஜபக்ஷ

16. மின்சக்தி அமைச்சர்  - டலஸ் அழகப்பெரும

17. நெடுஞ்சாலைகள் அமைச்சர் - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

18. கைத்தொழில் அமைச்சர் - விமல் வீரசன்ச

19. சுற்றாடல் துறை அமைச்சர்  - மஹிந்த அமரவீர

20. காணி அமைச்சர் - எஸ்.எம்.சந்திரசேன

21. கமத்தொழில் அமைச்சர் - மஹிந்தானந்த அளுத்கமகே

22. நீர்வழங்கல் துறை அமைச்சர் - வாசுதேவ நாணயக்கார

23.வலுசக்தி அமைச்சர் - உதய பிரபாத் கம்பன்பில

24. பெருந்தோட்டத்துறை அமைச்சர் - ரமேஸ் பத்திரண

25. சுற்றுலாதுறை அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க

26. துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர்  - ரோஹித அபேகுணவர்தன

27. இளைஞர்  மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் - நாமல் ராஜபக்ஷ

28. நீதியமைச்சர் - அலிசப்ரி