COVID19 இற்கான இலங்கையின் முன் களப் பணியாளர்களுக்கு அமெரிக்காவினால் உபகரணங்கள் அன்பளிப்பு

COVID19 இற்கான இலங்கையின் முன் களப் பணியாளர்களுக்கு அமெரிக்காவினால் உபகரணங்கள் அன்பளிப்பு

COVID-19 தொற்றுப் பரவலுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு பங்களிப்புச் செய்யும் நிமித்தம் அமெரிக்காவினால் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்கள் அடங்கிய அன்பளிப்பையொன்றை அனர்த்த முகாமைத்துவ நிலையத்திடம் இன்று (8) திங்கட்கிழமை கையளிக்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸினால் இந்த அன்பளிப்புக்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுதந்த ரணசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த அன்பளிப்பானது COVID-19ஐ எதிர்த்துப் போராடுவதற்கான “All of America” அணுகுமுறையின் அங்கமொன்றாகும் என்பதுடன், பொது சுகாதார அவரச நிலைகளுக்கு பதிலளிப்பதற்கான இலங்கையின் தயார்நிலையை வலுப்படுத்த இது உதவும்.

அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தினால் நிதியளிக்கப்பட்ட இந்த அன்பளிப்பில் 48,000 இற்கும் மேற்பட்ட முகக்கவசங்கள், பாதுகாப்பு கண்ணாடிகள், மற்றும் தலைக்கவசங்களுடன் கூடிய தனிமைப்படுத்தல் அங்கிகள் என்பன உள்ளடங்குகின்றன. COVID-19 இன் பொருளாதார தாக்கத்தில் இருந்து இலங்கை வர்த்தகங்கள் மீட்சிப் பெற்று வருகின்றன என்ற வகையில் அவற்றுக்கு ஆதரவளிக்கும் நிமித்தம் இந்த அனைத்து பொருட்களும இலங்கையிலேயே கொள்வனவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

"கொரோனா-வைரஸினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களை இலங்கையின் முன்களப் பணியாளர்கள் கவனித்து பராமரிக்கிறார்கள் என்ற வகையில்இ அவர்களுக்கு உதவுவதில் அமெரிக்கா பெருமையடைகிறது" என தூதுவர் டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

"இலங்கை வர்த்தகங்கள் மற்றும் தொழில்களுக்கு உதவும் அதேநேரம்இ இந்த சுகாதார பராமரிப்பு பணியாளர்களை பாதுகாக்க உதவுவதானது எமது ஆழமான நட்புறவின் ஓரங்கம் மட்டுமே" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த அன்பளிப்பானது இலங்கையின் அனர்த்த பதிலளிப்பு துறையின் நெகிழ்வுத்தன்மைஇ துரிதம் மற்றும் மீளெழுச்சித் திறனை விஸ்தரிப்பதற்கான அமெரிக்க உதவியின் ஓரங்கமாகும்.

இந்த அன்பளிப்புகளானது பாதுகாப்பு அமைச்சினதும் அனர்த்த நிவாரண அதிகாரிகளினதும் ஒருங்கிணைப்புடன் பின்வரும் சுகாதார பராமரிப்பு ஸ்தாபனங்களுக்கு விநியோகிக்கப்படும்

1. கண்டி மாவட்ட சுகாதார பணிப்பாளர் அலுவலகம்
2. கொழும்பு கிழக்கு முன் களப் பணியாளர்கள்
3. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய முன்களப் பணியாளர்கள்
4. கிளிநொச்சி பொது வைத்தியசாலை
5. வவுனியா பிராந்திய சுகாதார அலுவலகம்
6. யாழ்ப்பாண வைத்தியசாலை
7. கம்பஹா வைத்தியசாலை
8. மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிமனை