RTIயினை வினைத்திறனாக பயன்படுத்துவது தொடர்பில் இணையழி செயலமர்வு

RTIயினை வினைத்திறனாக பயன்படுத்துவது  தொடர்பில் இணையழி செயலமர்வு

"உலகத் தகவல் உரிமை தினம்" எதிர்வரும் செப்டம்பர் 28ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு,  "தகவல் அறியும் உரிமை (RTI) என்றால் என்ன?; அதை எவ்வாறு பயன்படுத்துவது?"  என்ற தலைப்பிலான இணையவழி கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் அனைத்து  குடிமக்களும் கலந்துகொள்ளும் வகையிலான இந்த இணையவழி செயலமர்வு இலவசமாக  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19) இரவு 7.30 முதல் இரவு 8.30 வரை இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் வளவாளாராக விடியல் இணையத்தள பிரதம ஆசிரியரும், RTI செயற்பட்டாளருமான றிப்தி அலி கலந்துகொள்கிறார்.

RTI தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அது எங்களது சமூகங்களிலும் பொதுவாக நாட்டிலும் எவ்வாறு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான சிறந்த தெளிவை வழங்குவதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

இந்த நிகழ்நிலை நிகழ்ச்சியினை  Zam Zam Foundation மற்றும் அதன் இளம் தலைவர்களுக்கான முன்மாதிரி பயிற்சித்திட்டத்தின் (EYLF)  ஒரு அங்கமாக 'Voice of Youth' இளைஞர் அமைப்பு  இதனை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இணைந்துகொள்ள விரும்புபவர்கள் https://forms.gle/RWizdnfb3DRJNDNC6 எனும் லிங்கின் ஊடாக பதிவு செய்யு முடியும்.