முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளராக முஸம்மில் நியமனம்?

முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பணிப்பாளராக முஸம்மில் நியமனம்?

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக எஸ்.எச். முஸம்மில் நியமிக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.

இவரது நியமனத்திற்கான அமைச்சரவை பத்திரம் எதிர்வரும் திங்கட்கிழமை (11) இடம்பெற்றவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளராக செயற்பட்டு வந்த ஏ.பீ.எம்.அஷ்ரப், கடந்த வாரம் தனது பதிவியினை இராஜினாமாச் செய்துள்ளார்.

இதனையடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்படவுள்ளார். ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்ட முஸம்மில் இலங்கை சிவில் நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியாவார்.

தற்போது கோரளைப்பற்று மத்தி – வாழைச்சேனை பிரதேச செயலாளராக கடமையாற்றி வரும் இவர், சுமார் எட்டு வருடங்களுக்கு மேல் காத்தான்குடி பிரதேச செயலளராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் பதவியில் தொடர்ச்சியாக நளீமி பட்டதாரிகளே நியமிக்கப்பட்டு வந்தனர். இதற்கு எதிராக கடந்த காலங்களில் இனவாத பௌத்த குழுக்களினாலும், சில முஸ்லிம் தரப்புக்களினாலும் விமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த நிலையிலேயே நளீமி பட்டதாரி அல்லாத ஒருவர் குறித்த பதவிக்கு நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.