முஸ்லிம் எய்ட் - ஸ்ரீலங்காவினால் ஒரு மில்லின் பெறுமதியான சுகாதார பொதிகள் அன்பளிப்பு

முஸ்லிம் எய்ட் - ஸ்ரீலங்காவினால் ஒரு மில்லின் பெறுமதியான சுகாதார பொதிகள் அன்பளிப்பு

கொவிட் - 19 தனிமைப்படுத்தல் நிலையங்களில் பயன்படுத்துவதற்காக முஸ்லிம் எய்ட் – ஸ்ரீலங்காவினால் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான 500 சுகாதார பொதிகளை நன்கொடையாக வழங்கப்பட்டன.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவிடம்  இராணுவத் தலைமையகத்தில் வைத்து இந்த நன்கொடை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

முஸ்லிம் எய்ட் - ஸ்ரீலங்காவின் இலங்கைக்கான பணிப்பாளர் ஏ.சீ.பைசர் கான், கொள்முதல் மற்றும் தளபாட அதிகாரி எம்.ஐ.இசாஹ், திட்டமிடல் பிரிவு முகாமையாளர் எம்.எச்.எம்.எம். அமீர் மற்றும் நிதி முகாமைத்துவ அதிகாரி எம்.பாஹிம் இக்பால் ஆகியோர் இந்;த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த சுகாதார பொதிக்குள் சுகாதார உபகரணங்கள், சலவை, சவர்க்காரம், கழிப்பறை தூய்மையாக்கிகள், பாதுகாப்பு துவாய்கள், பற்பசைகள், கைக்குட்டைகள், தொற்றுநீக்கு திரவியங்கள் அடங்கிய போத்தல்கள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன.

ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட இந்த சர்வதேச நிவாரண மற்றும் அபிவிருத்தி நிறுவனம், சமூக பொறுப்பு மற்றும் இன நல்லிணக்க செயரற்பாடுளுக்காக தனது சேவைகளை அடையாளப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது சுகாதார படிமுறைகளை பின்பற்றும் நடத்தைகள் தொடர்பில் எடுத்துரைத்த இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, அந்த சுகாதார சேவையின் முக்கியவத்தை கருத்தில் கொண்டு அன்பளிப்புக்களை வழங்கிய நிறுவனத்தின் பிரதிநிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

உலகலாவிய நாடுகள் தொற்றுநோயை எதிர்க்கொண்டு வருகின்ற போது சமூக பொறுப்பு, இன நல்லிணக்கம், நல்லெண்ணம் என்பன மிகவும் அவசியமானவை என்றும் இராணுவ தளபதி சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நாட்டின் முக்கிய அவசர நிலைகளின் போது கைகொடுத்து வருவதோடு, நிலையான பொருளாதார வலுவூட்டல், கல்வி ஆதரவு, பேரழிவு அபாயக் கட்டுப்படுத்தல் மற்றும்; நீர், சுகாதாரம், ஊட்டச்சத்து, வீட்டுவசதி, உட்கட்டமைப்பு, சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குதல், சமூக ஒத்திசைவு உள்ளிட்ட செயற்பாடுகளின் போது முன்நின்று செயற்படும் அமைப்பாக விளங்குகிறது.

அத்துடன் சுனாமி நிவாரணம், புனரமைப்பு மற்றும் புனர்வாழ்வுப் பணிகளை நிவர்த்தி செய்வதல், 2004 சுனாமிக்குப் பின்னரான நிலைமை ஆகிய நேரங்களில் கைகொடுப்பதற்காக முஸ்லிம் எய்ட் அமைப்பின் இலங்கைக்கான அலுவலகம் 2005ஆம் ஆண்டு மே மாதத்தில் திறக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திற்கு எதிரான இறுதிப் போர்கள் நடந்து கொண்டிருக்கும்போது நீர் மற்றும் சுகாதாரம், பரிந்துரைக்கப்பட்ட வைத்தியசாலைகளை இயக்குதல், சுகாதார பொதிகளை விநியோகித்தல் போன்றவற்றின் மூலம் இடம்பெயர்ந்தோருக்கு இந்த அமைப்பு உதவிகரம் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தகதாகும்.