கட்டாருக்கான இலங்கை தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பு

கட்டாருக்கான இலங்கை தூதுவர் கடமைகளை பொறுப்பேற்பு

கட்டாருக்கான புதிய இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள மபாஸ் முஹைதீன், தனது கடமைகளை கட்டாரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) பொறுப்பேற்றுக்கொண்டார்.

சமய நிகழ்வுகளுடன் தூதரகத்தில் சிறியதாக இடம்பெற்ற நிகழ்விலேயே இவர் கடமைகளை பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில் தூதுரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

"நாட்டின் தேசிய நலன், இலங்கையர்களின் நலன்புரி மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவினை வலுப்படுத்தல் ஆகியவற்றுக்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்" என இந்த நிகழ்வில் தூதுவர் மபாஸ் முஹைதீன் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு, சுற்றுலா மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் பாரிய நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதை தூதுவர் இலக்காகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் பழைய மாணவரான இவர், லண்டன் இம்பிரியல் கல்லூரியின் பொறியியல் பட்டதாரியாவார்.