ஊடகங்கள் மீதான அடக்குமுறை சமூக ஊடகங்களின் ஊடாக ஆரம்பம்: சஜித்

ஊடகங்கள் மீதான அடக்குமுறை சமூக  ஊடகங்களின் ஊடாக ஆரம்பம்: சஜித்

ஊடகங்கள் மீதான அடக்குமுறையை அரசாங்கம்இ சமூக ஊடகங்களின் ஒடுக்குமுறைகளின் ஊடாக தொடங்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"அரசாங்கம் தனது அதிருப்தியாளர்களைத் தகர்த்தெறிவது இது முதல் தடவை அல்ல. ஊடகங்களுக்கு சுய தணிக்கை தேவை என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றாலும் அரசின் செல்வாக்கு அல்லது வேறு எந்தக் சக்திகளினதும் ஆதிக்கத்தால் அல்ல என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

ஊடக சுதந்திரம் மற்றும் தகவல் அறியும் உரிமை மற்றும் அனைத்து வகையான அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாங்கள் நிபந்தனையின்றி முன் நிற்கிறோம்.

ஊடகங்களை எதிர்த்த ஒவ்வொரு ஆட்சிக்கும், ஒவ்வொரு ஆட்சியாளருக்கும் ஏற்பட்ட விதியை வரலாறு சாட்சியமளிக்கிறது. அனைத்து ஊடகங்களின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் நாங்கள் முன்னணியில் நிற்போம்" என்றார்.