சர்ச்சைக்குரிய பாணந்துறை ஜனாஸா வீட்டிற்கு சாணக்கியன், சுமந்திரன் விஜயம்

சர்ச்சைக்குரிய பாணந்துறை ஜனாஸா  வீட்டிற்கு சாணக்கியன், சுமந்திரன் விஜயம்

கொரோனா சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த பாணந்துறை நபரின் வீட்டிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் ஆகியோர் இன்று (09) புதன்கிழமை விஜயம் செய்தனர்.

குறித்த ஜனாஸா இல்லத்திற்கு சென்று மரணித்தவரின் உறவினர்களையும் பிரதேச மக்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சம்பவம் தொடர்பாக தீர விசாரித்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,

“இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் ஒரு விதமாகவும், பொலிஸார் ஒரு விதமாகவும், உறவினர்கள் ஒரு விதமாகவும் தெரிவிக்கின்றனர், எனவே இது தொடர்பில் பாராபட்சமற்ற நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இங்கு தமிழரா, முஸ்லிமா, சிங்களவரா என்பதல்ல விடயம்! இது போன்ற அநியாயங்கள் நாட்டில் அதிகரிக்க கூடாதென்பதற்காகவே நாம் இங்கு வந்து இவற்றை விசாரித்தறிந்தோம்” என்றார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பொலிஸார்ர் இருவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.