அலி ஸாஹிர் மௌலானாவின் புதல்வரின் பெயர் தேசியப்பட்டியலில்

அலி ஸாஹிர் மௌலானாவின் புதல்வரின் பெயர் தேசியப்பட்டியலில்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அலி ஸாஹிர் மௌலானாவின் புதல்வாரன அம்ஜத் மௌலானவின் பெயர் தேசியப்பட்டியலில் நியமனப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான சமகி ஜன பலவேகய கட்சியின் தேசியப் பட்டியல் நியமன பெயர் பட்டியலிலேயே இவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிபாரிசிற்கு அமையவே இந்த பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், அக்கட்சியின் பிரதி தவிசாளர் மஸ்ஹுதீன் நயீமுல்லாஹ் மற்றும் கல்முனை பிரதி மேயர் ரஹ்மத் மன்சூர் ஆகியோரின் பெயர்களும் இந்த தேசிய பட்டியலில் உள்ளடக்க்பபட்டுள்ளன.