அனுஷ பெல்பிட்ட அமைச்சின் செயலாளராக நியமனம்

 அனுஷ பெல்பிட்ட அமைச்சின் செயலாளராக நியமனம்

இலங்கை நிர்வாக சேவையில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற அனுஷ பெல்பிட்ட, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் புதிதாக உருவாக்கப்பட்ட இந்த அமைச்சு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் செயற்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சிபாரிசுடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தரவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சர் விமல் வீரவன்சவின் கைத்தொழில் அமைச்சின் செயலாளராக செயற்பட்ட இவர், அண்மையில் இலங்கை நிர்வாக சேவையில் இருந்து தானாக ஓய்வுபெற்றார்.

இதனையடுத்து தேசிய லொத்தர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இவர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.