முஸ்லிம் எயிடினால் அன்பளிப்பு செய்யப்பட்ட உபகரணங்களின் ஒரு தொகுதி தெபரவேவ, வலஸ்முல்ல வைத்தியசாலைகளுக்கு வழங்கல்

முஸ்லிம் எயிடினால் அன்பளிப்பு செய்யப்பட்ட உபகரணங்களின் ஒரு  தொகுதி தெபரவேவ, வலஸ்முல்ல வைத்தியசாலைகளுக்கு வழங்கல்

முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் அண்மையில் அன்பளிப்பு செய்யப்பட்ட 30 மில்லியன் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களின் ஒரு தொகுதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தெபரவேவ மற்றும் வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைகளுக்கு வழங்ப்பட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த மருத்துவ உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலையீட்டில் இந்த உபகரணத் தொகுதி வழங்கிவைக்கப்பட்டது.

வயோதிபர்கள் மற்றும் சிறுவர்களுக்காக பயன்படுத்தக்கூடிய வென்டிலேட்டர் (Ventilators), ஒக்சிஜன் கருவிகள் (Oxygen therapy), பீ.பீ.ஈ. (PPE) கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் இதில் உள்ளடங்கும்.

குறித்த நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷஇ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.