அரச ஊழியர்களுக்கு வாய்ப்பூட்டு; சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்க தடை

அரச ஊழியர்களுக்கு வாய்ப்பூட்டு; சமூக  ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்க தடை

அரசாங்கம் மற்றும் அதன் கொள்கைகளை அரச ஊழியர்கள் சமூக ஊடகங்களில் விமர்சிப்பதற்கு தடைவிதிக்க்பட்டுள்ளது.

இது தொடர்பில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் விசேட சுற்றுநிரூபமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சுற்றுநிரூபத்தினை மீறி அரசாஙகத்தினை சமூக ஊடகங்களில் விமர்சிக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தினை விமர்சிப்பதாக கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

தாபன விதி கோவையின் பிரகாரம் அரசாங்கத்தினை விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு கடுமையான தண்டை விதிக்க முடியும் எனவும் குறித்த சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வாறான செயல்களில் ஈடுபட்ட அரச ஊழியர்களை அடையாளம் காண உள்நாட்டலுவல்கள் அமைச்சு,  தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியையும் நாடியுள்ளது.

இது தொடர்பில் தங்களுக்கு கீழுள்ள அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு மாவட்ட மாவட்ட செயலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிராம சேவையாளர்களே இவ்வாறு அரசாங்கத்துக்கு எதிராக  கடுமையான விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் முன்வைப்பது தொடர்பில் அதிக முறைப்பாடு கிடைத்துள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒழுக்கமான அரச சேவையினை உருவாக்குவதே இதன் நோக்கமாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சன்டே டைம்ஸ்