வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் சர்வதேச இறையாண்மை பிணைப்பத்திரங்கள்

வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் சர்வதேச இறையாண்மை பிணைப்பத்திரங்கள்

கசுன் திலின காரியவசம்

கடந்த 12 ஆண்டுகளில் வளர்ந்து வரும் சந்தைகளின் இறையாண்மைக் கடனில் மொத்தமாக 1,737.2 பில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

அதிகரித்த வட்டி விகிதங்களின் விளைவாக, வளர்ந்து வரும் சந்தைகள் (EMs) பிணைப்பத்திரங்களின் மொத்த வட்டியில் 63% இனை செலுத்தின. 2020 முதல், ஆர்ஜென்டினா, ஸாம்பியா மற்றும் இலங்கை ஆகியவை சமூக-பொருளாதாரக் கொந்தளிப்பு காரணமாக பிணைபத்திரங்களின் மீள்கொடுப்பனவைச் திருப்பிச் செலுத்த தவறிவிட்டன.

தற்போதைய பகுப்பாய்வுகளின்படி, கானா மற்றும் அமெரிக்கா உட்பட ஆறு நாடுகள் அனைத்தும் தங்கள் கடனைச் செலுத்துவதில் ஒரே மாதிரியான சவால்களை எதிர்கொள்கின்றன.

சர்வதேச கடன் பத்திரங்கள் மூலம், உலக மூலதனச் சந்தை இயற்கையாகவே வளர்ந்து வரும் சந்தைகளை அதிகரித்த கடன் அபாயத்தின் வலையில் சிக்க வைத்துள்ளது.

வளர்ந்து வரும் சந்தைகள் அதிகரித்த கடன் அபாயத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, ஏனெனில் பொருட்களின் விலைகள் அதிகமாக இருக்கும்போது நிதி நிறுவனங்கள் அதிகமான கடன் பத்திரங்களை வெளியிடுவதற்கு ஊக்குவித்தன.

இன்று, பொருளாதார வீழ்ச்சி மற்றும் அமெரிக்க டொலரின் அதிகரித்த வட்டி விகிதங்களின் விளைவாக, இந்த நாடுகள் பல சவால்களை எதிர்கொள்கின்றன.

2008 இல் உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பின், அனைத்து குறைந்த மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளின் சர்வதேச இறையாண்மைப் பிணைப்பத்திரங்களின் பங்கு 2009 இல் 484.3 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 2020 இல் 1,737.2 பில்லியன் டொலராக உயர்வடைந்த இந்தப் போக்கு குறிப்பான சான்றாகியது.

குறைந்த மற்றும் EM நாடுகளில், சர்வதேச இறையாண்மைப் பிணைப்பத்திரங்கள் 2009 இல் 30.7% ஆக இருந்ததிலிருந்து அதிகரித்து 2020 ஆம் ஆண்டில் அரசாங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட வெளிநாட்டுக் கடனில் 50.4% ஆகியது.

வளர்ந்து வரும் சந்தைகளின் ஒட்டுமொத்த கடனில் பாரம்பரிய இருதரப்பு மற்றும் பல்தரப்பு கடன்களின் பங்கு குறைவடைந்துள்ளது. 2009 முதல், துணை-சஹாரா ஆபிரிக்க நாடுகளால் வழங்கப்பட்ட சர்வதேச இறையாண்மைப் பிணைப்பத்திரங்களின் பங்குகள் நான்கு மடங்கு அதிகரித்து 136.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளன.

அதே காலகட்டத்தில், ஆபிரிக்க நாடுகளின் இருதரப்புக் கடன் இரட்டிப்பாக மட்டுமே அதிரித்து, 2020 இல் 114.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததுடன், இது போன்ற நிகழ்வுகள் மற்ற இடங்களிலும் காணப்படுகின்றன.

மேலும், ஆபிரிக்க நாடுகள் 2013-2019ல் இருதரப்பு மற்றும் பல்தரப்பு கடனுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த விகிதத்தில், 4% முதல் 10% வரையிலான கூப்பன் விகிதங்களில் 10 ஆண்டு யூரோபிணைப்பத்திரங்களை வழங்கியுள்ளன.

சர்வதேசப் பிணைப்பத்திரங்களின் மீதான பொதுவாக அதிகரித்த வட்டி விகிதங்கள் காரணமாக, சர்வதேச பிணைப்பத்திரக் கடன் சேவையின் நிதிச் செலவுகள், இந்த நாடுகளுக்கான கடன் சேவைச் செலவில் அதிக சதவீதத்தைக் கொண்டுள்ளன.

2020ஆம் ஆண்டில், EM கள் தங்களின் மொத்த வட்டித் தொகையில் 63.2% இனை சர்வதேசப் பிணைப்பத்திரங்கள் மீது செலுத்தியுள்ள அதே நேரத்தில் இருதரப்புக் கடனிற்கு 9.8% மட்டுமே செலுத்துகின்றன.

பிணைப்பத்திரங்களை வெளியிடும் வளர்ந்து வரும் சந்தைகள், உயரும் பிணைப்பத்திரப் பங்குகள் மற்றும் அதிகரித்த நிதிச் செலவுகள் அவற்றை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அறிந்திருக்க வேண்டும்.

கடுமையான நிதிப் பற்றாக்குறை, பண்டங்களின் விலை வீழ்ச்சி, சர்வதேச கேள்வி குறைதல் மற்றும் கொவிட்-19 பெருந்தொற்று போன்ற வெளிப்புற காரணிகளின் கலவையால், EM கள் 2016 முதல் படிப்படியாக அதிகரித்து வரும் கடன் அழுத்தத்தை எதிர்கொள்கின்றன.

சர்வதேச அவதானமானது இறையாண்மைக் கடன்கள் மீதான சர்வதேச கடன் பத்திரங்களின் தாக்கத்தை குறைத்து மதிப்பிடும் அதே வேளையில், சீனா போன்ற மேற்கத்தியர் அல்லாத வளர்ந்து வரும் கடன் வழங்குநர்கள் மீது அதிக கவனம் செலுத்தியதுடன் "கடன் பொறிகள்" போன்ற ஆதாரமற்ற வாதங்களை முன்வைத்தது.

வரவிருக்கும் ஆண்டுகளில், சர்வதேச பிணை பத்திரத் மீள்செலுத்துகையின் உச்சம் மற்றும் அமெரிக்க டொலர் வட்டி விகித உயர்வின் புதிய சுழற்சியால் ஏற்படும் மூலதனச் சந்தைகளில் திரவத்தன்மை ஆகியவற்றின் காரணமாக EM கள் அதிகரித்த வெளிநாட்டுக் கடன் சுமையைக் கொண்டிருக்கும்.

இருப்பினும், சர்வதேச இறையாண்மைப் பிணைபத்திரங்கள் (ISB) அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு சில நன்மைகளைக் கொண்டுள்ளதுடன், அதனால்தான் அவை தங்கள் மூலதனத் தேவைகளுக்காக பிணைபத்திரச் சந்தையை நம்பியிருக்கின்றன.

சர்வதேச இறையாண்மை பிணைபத்திர வெளியீடுகள் ஒப்பீட்டளவில் இலகுவாக ஆரம்பிக்கக்கூடிய நேரடியான செயன்முறையாகும். வளர்ந்து வரும் சந்தைகளில், அதிக அளவு தடைகள் காரணமாக மூலதன ஏற்ற இறக்கங்கள் எதிர்வுகூற முடியாதவையாகும்.

அவற்றின் பாதையை துல்லியமாக எதிர்வுகூற முடியாது. இது போன்ற சந்தர்ப்பங்களில், கடன் வாங்குவதற்கான கருவியாக ISB க்களைப் பயன்படுத்தலாம்.

வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் தனியார் பிணைபத்திரங்களுக்கான தரநிலை வழங்குவது தனியார் நிறுவனங்கள் விரைவாக முன்னேறுவதற்கு உதவும்.

சர்வதேச முதலீட்டாளர்களிடையே நம்பிக்கை மற்றும் நற்பெயரைக் கட்டியெழுப்புவதன் விளைவாக, அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் பெரிய அளவிலான அணிதிரட்டல் நடவடிக்கைகளுக்கான சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

முதலீட்டாளர்கள் சர்வதேச இறையாண்மைப் பிணைப்பத்திரங்களுக்காக பெரும் ஆர்வத்தை கொண்டுள்ளனர். வளர்ந்து வரும் சந்தைப் பிணைப்பத்திரங்களின் விகிதங்கள் ஒப்பீட்டளவில் அதிகமாகவும் அவற்றின் அபாயங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவும் உள்ளதால் அவை பெரும்பாலும் அதிகளவான முதலீட்டின் ஒரு பகுதியாகும்.

இதன் விளைவாக, முதலீட்டாளர்கள் வளர்ந்து வரும் சந்தைகளின் சர்வதேச இறையாண்மைப் பிணைப்பத்திரங்களுக்காக அதிகமான ஆர்வத்தை கொண்டுள்ளனர்.

சர்வதேச இறையாண்மைப் பிணைப்பத்திரங்கள் வளர்ந்து வரும் சந்தைகளுக்கு நன்மைகளை விட அதிகமான விளைவுகளை ஏற்படுத்தியதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன.

முதலாவதாக, பெரும்பாலான EM கள் தங்கள் பொருளாதாரத்தை வழிநடத்துவதற்கு ஒரு ஒத்திசைக்கப்பட்ட தொழிற்துறை திட்டத்தை அமைக்கத் தவறிவிட்டன.

இதன் காரணமாக, இது ஒரு துண்டாடப்பட்ட சொத்து ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது. பொருளாதார ஓட்டத்தில் தடையை உருவாக்குவதற்கு மேலதிகமாக, துண்டாடப்பட்ட சொத்து ஒதுக்கீடும் சந்தை முரண்பாட்டை உருவாக்குகின்றது.

உலகப் பொருளாதாரத்தின் வெளிப்புற அதிர்ச்சிகளை EM களால் சமாளிக்க முடியவில்லை. பெரும்பாலான EMகள் தங்கள் பொருளாதாரங்களைப் பாதுகாப்பதற்கான பேரினப் பொருளாதார முன்னெச்சரிக்கை வழிமுறைகளைக் கொண்டிருக்கவில்லை. இதன் விளைவாக, அவர்கள் வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

இலங்கையின் நிலைமை

இலங்கையின் பொருளாதாரம் பெருந்தோட்டங்களைச் சுற்றியே உள்ளது. அதன் முக்கிய பயிர்களாவன தேயிலை, இறப்பர், தேங்காய் மற்றும் அரிசி என்பனவாகும்.

நாட்டில் பலவீனமான கைத்தொழிற்துறை தளம் உள்ளது, ஆனால் விவசாயம் மற்றும் ஆடை உற்பத்தி ஆகியவைமுக்கியமான தொழிற்துறைகளாக உள்ளன. இலங்கையின் குறைந்த அளவிலான தொழில்நுட்ப அபிவிருத்தியின் காரணமாக பொருளாதார வளர்ச்சி உத்வேகம் போதுமானதாக இல்லை.

2013 - 2019 காலகட்டத்தில், அதன் GDP வளர்ச்சி விகிதம் 2% - 4% இடையே இருந்ததுடன், இது தெற்காசியாவில் அதன் அண்டை நாடுகளை விட குறைவாக இருந்தது. அதன் அந்நியச் செலாவணி வருமானம் பிரதானமாக முதன்மை தயாரிப்புகளின் ஏற்றுமதி, புலம்பெயர்ந்தோரிடமிருந்து பணம் அனுப்புதல் மற்றும் சுற்றுலா ஆகியவற்றிலிருந்து பெறப்படுவதுடன், அதன் ஏற்றுமதிகள் பரவலாக ஏற்ற இறக்கமாக உள்ளன.

பல வருடங்களாக, இலங்கையின் ஏற்றுமதிகள் தேக்கமடைந்ததுடன் சில சமயங்களில் எதிர்மறையான வளர்ச்சியைப் பதிவுசெய்து வர்த்தகப் பற்றாக்குறையை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பும் குறைந்துள்ளது. நவம்பர் 2019 இல் பதவியேற்றவுடன், நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு USD 7.5 பில்லியனில் இருந்து USD 5 பில்லியனாகவும், பின்னர் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் USD 2 பில்லியனாகவும் குறைந்ததுடன், இது அடுத்த சில மாதங்களுக்கான இறக்குமதி செலவினங்களை மட்டுமே ஈடுகட்ட போதுமானதாகும். அதேநேரத்தில், பொது வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

சமூக நலன்புரி மானியக் கொள்கைகள் நீண்ட காலமாக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், அது பெரும் செலவின அழுத்தங்களை ஏற்படுத்துவதுடன் நீண்டகால கடன்களை வாங்குவதன் மூலம் மட்டுமே அதனை தணிக்க முடியும்.

2007 மற்றும் 2017 க்கு இடையில், இலங்கையின் ஒட்டுமொத்த வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 160% அதிகரித்ததுடன் அரசாங்கத்திற்கான செலுத்த வேண்டிய மொத்த கடன் 209% அதிகரித்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

முதலீட்டு வருமானம் பற்றாக்குறை மற்றும் அதன் வர்த்தகக் கடன்களுக்கான அதிகரித்த வட்டி வீதம் காரணமாக, இலங்கை அண்மைய ஆண்டுகளில் கடன் நெருக்கடியில் உள்ளது. 2007 முதல் 2017 வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் செயற்திட்டங்களுடன் தொடர்பில்லாத கடன்களில் 605% அதிகரிப்பு இருந்தது.

ஆனால் அதன் செயற்திட்டக் கடன்களில் 117% மட்டுமே அதிகரித்துள்ளது. செயற்திட்டம் அல்லாத கடன்களின் முதல் மற்றும் வட்டி மிக வேகமாக அதிகரித்ததுடன், அவற்றை திருப்பிச் செலுத்துவதற்கான போதுமான வருமானத்தை அவர்களால் உருவாக்க முடியவில்லை.

மேலும், 2007 ஆம் ஆண்டு சர்வதேச இறையாண்மை பிணைப்பத்திரங்கள் வெளியிடப்பட்டதிலிருந்து இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் பலதரப்பு மற்றும் இருதரப்பு முன்னுரிமைக் கடன்களின் விகிதம் வேகமாகக் குறைந்துள்ளது.

அரசாங்கம் 6.29% சராசரி வட்டி விகித்துடனான மொத்தக் கடனில் 42.98% பங்கை கொண்டுள்ள தற்போதுள்ள கடனை குறுகிய காலத்தில் திருப்பிச் செலுத்துவதற்கு புதிய கடனைப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

2017 மற்றும் 2019 க்கு இடையில் 14 பிணைப்பத்திரங்களை வழங்கியதன் பின்னர் 2019 இல் இலங்கையின் சர்வதேச பிணைப்பத்திரங்களின் கூப்பன் வீதம் 7.85% ஆக அதிகரித்தது.

வலுவான டொலர் மற்றும் வளர்ந்த நாடுகளில் மூலதனச் சந்தைகளின் மீட்சி காரணமாக இலங்கை குறிப்பாக மீள் நிதியளிப்பு தொடர்பான நெருக்கடிக்கு ஆளானது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, இலங்கையின் வெளிநாட்டுக் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 119% என்பதுடன், இது 2019 இல் 42% ஆக இருந்தது.

வெளிநாட்டு கடனுக்கான அந்நிய செலாவணி கையிருப்பின் விகிதம் 2011 இல் 24.2% இல் இருந்து 2021 இல் 5.48% ஆக குறைந்துள்ளதுடன், இது இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

2019-2022 மற்றும் 2025-2027 ஆகிய இரண்டு வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான உச்ச காலங்கள் இலங்கையில் உள்ளன, இதனால் எதிர்காலத்தில் அவசரநிலைகள் ஏற்படும்.

கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதலால் இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. முதல் கட்டமாக, சுற்றுலாத்துறையின் பத்தில் ஒரு பங்கிற்கு மேலாக இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பயன்பட்டது.

இலங்கையில் சுற்றுலா 2018 இல் 4.4 பில்லியன் அமெரிக்க  டொலர்களை ஈட்டியதுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.6% பங்களிப்பை வழங்கியது, ஆனால் பெருந்தொற்று காரணமாக, 2018 இல் இந்த எண்ணிக்கை 0.8% ஆக குறைவடைந்தது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பெப்ரவரி 2022க்கான மாதாந்த சுற்றுலா வருகைகள் தொடர்பான அறிக்கையின் புள்ளிவிவர தரவு இலங்கையின் முதல் இரண்டிடத்தில் உள்ள வருகைதரும் சுற்றுலா பயணிகளாக ரஷ்யர்களையும் உக்ரேனியர்களையும் குறிப்பிடுகின்றது.

2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் ரஷ்யாவில் இருந்து 28,000 சுற்றுலாப் பயணிகளையும் உக்ரேனிலிருந்து 13,062 சுற்றுலாப் பயணிகளையும் இலங்கை பெற்றுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் மோதல் காரணமாக இரு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைவடைந்துள்ளது. இலங்கையின் மிகப்பெரிய தேயிலை இறக்குமதியாளராக ரஷ்யா இருப்பதால், இந்த மோதல் அந்நிய செலாவணி கையிருப்பின் மற்றொரு ஆதாரமான தேயிலை ஏற்றுமதியையும் பாதிக்கின்றது.

மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, ரூபிளின் பெறுமதி சரிவடைந்ததால், ரஷ்யர்கள் இலங்கை தேயிலையை தொடர்ந்து இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

மேலும், பெருந்தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் மோதலின் விளைவாக உலகளாவிய ரீதியில் பொருட்களின் விலைகள் உயர்வடைந்ததுடன், இது இலங்கையில் கச்சா எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது. மார்ச் 2022 க்குள் தேசிய பணவீக்க விகிதம் 17.5% ஆக உயர்வடைந்ததுடன் அந்நிய செலாவணி கையிருப்பு USD 1.9 பில்லியன் ஆக குறைவடைந்தது.

2022 இல் முதிர்ச்சியடையும் யூரோ பிணைப்பத்திரங்களுக்கு 2022 இல் செலுத்த வேண்டிய டொலர் கடனைத் திருப்பிச் செலுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இந்தச் சூழ்நிலையில், சுதந்திரத்திற்குப் பிறகு முதற் தடவையாக, தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதென 2022 ஏப்ரல் 12 அன்று இலங்கை அறிவித்தது.

இலங்கையில் வெற்றிகரமான தொழிற்துறை மாற்றமெதுவும் ஏற்படவில்லை, மற்றும் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ புதிய வருமான ஆதாரங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.

அதற்கு பதிலாக நாடு பெரிய அளவிலான வணிகப் பிணைப்பத்திரங்களை வெளியிட்டதுடன், இது நிதிப் பற்றாக்குறையை ஏற்படுத்தியதுடன் உயரும் வட்டி விகிதங்களுடன் பழைய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு புதிய கடனை வாங்கும் இக்கட்டான நிலைக்கு வழிவகுத்தது.

பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் சர்வதேச நிதி தளம்பல்கள் காரணமாக, இலங்கைப் பொருளாதாரம் அதிகமான சுமைகளைத் தாங்கி, வேகமாகச் சரிவடைந்தது. இலங்கையின் வலிமிகுந்த பாடங்களை ஏனைய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

சர்வதேச இறையாண்மை பிணைப்பத்திரங்களில் உள்ள பிரச்சினைகள்

விரிவாக்க நிதிக் கொள்கைகள் காரணமாக அபிவிருத்தியடைந்துரும் நாடுகளுக்கு நிதி தேவைப்படுகிறது என்பது உண்மைதான். சர்வதேச நிதிச் சந்தையில் சர்வதேச இறையாண்மைப் பிணைப்பத்திரங்களை இலகுவாக வழங்குவதன் காரணமாக, குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் நீண்ட மீள் செலுத்தல் காலப்பகுதிகளுடன் அவர்கள் இருதரப்பு மற்றும் பல்தரப்பு முன்னுரிமைக் கடன்களின் விகிதத்தைக் குறைத்தனர்.

எவ்வாறாயினும், மேம்பட்ட பொருளாதாரங்களைச் சேர்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் சொந்த வணிக நலன்களிலிருந்து முற்றிலும் சுதந்திரமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளால் வழங்கப்படும் கடன் பிணைப்பத்திரங்களில் ஆர்வமாக உள்ளனர்.

அவர்களின் செயற்பாடுகள் பிரதானமாக உலகின் முதிர்ந்த சந்தைகளின் நடைமுறைகளைப் பின்பற்றுவதுடன், இது முதலீட்டாளர்களின் குறுகிய காலத்தில் அதிக வருமானத்தைப் பெறுவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

ஆனால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார கட்டமைப்புகளின் பலவீனமடையும் தன்மையையும் நீண்டகால அபிவிருத்தியின் தனித்துவத்தையும் புறக்கணிக்கிறது.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான வணிக சர்வதேசப் பிணைப்பத்திரங்களுடன் தொடர்புடைய மூன்று முறையான அபாயங்கள் உள்ளதுடன், அவை கடன் செலுத்தமுடியாத நிலை நெருக்கடிகள் மேலும் விரிவடைவதைத் தவிர்க்கவும் உலகளாவிய அபிவிருத்திக்கான மிகவும் தீவிரமான விளைவுகளைத் தவிர்க்கவும் கவனிக்கப்பட வேண்டும். கூடிய விரைவில் சிறப்பு கவனம் மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் அழைப்புவிடுக்கிறார்கள்.

இறையாண்மைப் பிணைப்பத்திரங்கள் செயன்முறைக்குரியவை

மேற்கத்திய நிதி நிறுவனங்களின் விலையிடுகை, சந்தாக்கள் மற்றும் மதிப்பீடுகள் பொருளாதார சுழற்சியின் போது சில அளவுகோல்களுக்குள் தளம்பலுடன் காணப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை செயன்முறை சார்ந்தவையாகும்.

பிரதானமாக கனியவளம் மற்றும் எரிசக்தி ஏற்றுமதியை நம்பியிருக்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் அதிகரித்த உலகளாவிய பணத்திரவத்தன்மையான மற்றும் வணிக விலையிடுகை காலங்களில் பொருளாதார மறுமலர்ச்சி காலத்தில் உள்ளதுடன், அவை சர்வதேச இறையாண்மை பிணைப்பத்திரங்களை வெளியிடுவதற்கான அதிக வாய்ப்புகளை கொண்டுள்ளதுடன் அவை அதிக மதிப்பீடுகளை கொண்டிருக்கும் அதே நேரத்தில் பிணைப்பத்திரங்களை வழங்குவதற்கான செலவீனம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. உலகளாவிய மந்தநிலை மற்றும் வளங்களின் பெறுமதிகள் வீழ்ச்சியடைவதால், இந்த நாடுகள் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு அதிகமாக கடன் வாங்க வேண்டியிருக்கும், ஆனால் இந்த நிலையில், மதிப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் கடன் மதிப்பீடுகளை குறைக்கும்.

இதற்கிடையில், புதிய பிணைப்பத்திரங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு அதிகரித்த கூப்பன் விகிதங்கள் மற்றும் குறைந்த வெளியீட்டு விலைகள் தேவைப்படுகின்றன, இது சிக்கலை மேலும் மிகைப்படுத்துகிறது. அபிவிருத்தியடைந்த நாடுகளும் இதே போன்ற மிகைப்படுத்தப்பட்ட சந்தை தளம்பல்களை எதிர்கொள்வது உண்மைதான், ஆனால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் குறைவான வருமான ஆதாரங்கள் மற்றும் சிறிய பொருளாதார அளவுகள் உள்ளதால், அவை நெருக்கடி அல்லது வழுநிலையை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.

மேலும், ISB முக்கியமாக அமெரிக்க டொலரில் குறிப்பிடப்படுகிறது. ஆகவே, டொலரின் திரவத்தன்மை தளர்வாகவும், மாற்று விகிதம் குறைவாகவும் இருக்கும்போது, ISBஐ இலகுவாக வழங்க முடியும்.

இருப்பினும், அமெரிக்க டொலரின் வட்டி விகிதம் உயரும் போதும் அதன் நாணயமாற்று விகிதம் உயரும் போதும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இருந்து அதிகளவான நிதி வெளியேறுகிறது.

இறுக்கமான பணநிலையின் போது, கடன் பிணைப் பத்திரங்களை வழங்கும் நாடுகள் அதிகமான வட்டி விகிதங்கள் மற்றும் மாற்று விகிதங்களில் கடன்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

மதிப்பீட்டு நிறுவனங்களின் வகிபாகம்

உலகளாவிய கடன் சந்தையில், S&P, மூடிஸ் மற்றும் ஃபிட்ச் மதிப்பீடுகள் ஆகியன 95% சந்தைப் பங்கைக் கட்டுப்படுத்துகின்றன. இது முதன்மையாக பேரினப் பொருளாதாரம், நிதி மற்றும் வெளிப்புற அபாயங்களின் பகுப்பாய்வு மூலம் மூன்று நிறுவனங்களும் ஒரு நாட்டிற்கு ஒரு இறையாண்மை கடன் மதிப்பீட்டை வழங்குகின்றன.

பலவீனமான பொருளாதார குறிகாட்டிகள் காரணமாக, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பொதுவாக மூன்று நிறுவனங்களின் தற்போதைய மதிப்பீட்டு கட்டமைப்பின் அடிப்படையில் குறைந்த இறையாண்மை மதிப்பீடுகளைக் கொண்டுள்ளன.

குறைவான நிதி அபாயத்தை தாங்கும் திறனின் விளைவாக, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நிர்வாக பொறிமுறைகள் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல முதிர்ச்சியுடனும், உறுதியானதாகவும் இருப்பதில்லை.

2000 முதல் 2009 வரை, ஒரு கற்கை 60 நாடுகளில் உள்ள மூன்று பெரிய மதிப்பீட்டு நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட பேரினப் பொருளாதார தரவு மற்றும் சராசரி இறையாண்மை கடன் மதிப்பீடு ஆகியவற்றை ஆய்வு செய்தது.

ஆய்வின்படி, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம், சேமிப்பு/முதலீடுகள் மற்றும் மொத்த அரசாங்க பொறுப்புகள் ஆகியவை இறையாண்மை கடன் மதிப்பீடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அதே நேரத்தில் பற்றாக்குறைகள், நடைமுறைக் கணக்கு நிலுவைகள், அந்நியச் செலாவணி இருப்புக்கள் மற்றும் வெளிநாட்டுக் கடன் ஆகியவை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் இறையாண்மைக் கடன் மதிப்பீடுகளை பாதிக்கும் முக்கிய காரணிகளாகும்.

இந்த ஆய்வின்படி, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் இறையாண்மைக் கடன் மதிப்பீடுகள் அபிவிருத்தியடைந்த நாடுகளைக் காட்டிலும் குறுகிய கால காரணிகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமென்பதுடன், அதன் விளைவாக அவை அடிக்கடி மாறுகின்றன.

நிதி உறுதித்தன்மை, சிறந்த நாணயமாற்று விகித செயற்திறன், பொருளாதார வளர்ச்சி மற்றும் பிற காரணிகள் காரணமாக, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பிணைப்பத்திரங்களை வெளியிடும் போது அதிகமான இறையாண்மை கடன் மதிப்பீடுகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், கடனைத் திருப்பிச் செலுத்தும் போது எதிர்பாராத வெளிப்புற அபாயங்கள் ஏற்பட்டால், அவை தரமிறக்கப்படலாம் மற்றும் கடன் நெருக்கடியை அனுபவிக்கலாம்.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகள், கொவிட்-19 இன் விளைவாக புதிய பொது சுகாதாரச் செலவினங்களை ஈடுகட்ட கடன் வழங்கும் நாடுகளிடமிருந்து கடனை நிறுத்துவதற்கு அல்லது நிவாரணம் கோரி விண்ணப்பிக்கும் போது, அவர்களின் இறையாண்மைக் கடன் மதிப்பீடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

எதியோப்பியா கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராட G20 நாடுகளிடம் கடன் மறுசீரமைப்பிற்கு விண்ணப்பித்த பிறகு, S&P, மூடிஸ் மற்றும் ஃபிட்ச் அதன் மதிப்பீடுகளைக் குறைத்தன.

எதியோப்பியாவின் இறையாண்மை கடன் மதிப்பீடு "B" இலிருந்து "CCC" ஆக S&P ஆல் குறைக்கப்பட்டது; மூடிஸ் "B2" இலிருந்து "Caa2" வரையாகவும்; மற்றும் ஃபிட்ச் "B" இலிருந்து "CCC" வரை குறைக்கப்பட்டது. ஒட்டுமொத்த கடன் அபாயம் கடுமையாக உயர்ந்ததால், கடன் நிலைத்தன்மை கடுமையாக சவாலாகியது.

அபிவிருத்திப் போக்குகளுக்கும் ISB களுக்கும் இடையிலான பொருந்தாத்தன்மை

அதன் குறுகிய கால நோக்குநிலைக்கு மேலதிகமாக, ISB களும் செறிவூட்டப்பட்ட முதிர்ச்சியைக் கொண்டுள்ளன. பொதுவாக EMகளில் உட்கட்டமைப்பு கட்டுமானம் மற்றும் உற்பத்தி திட்டங்கள் நிறைவு செய்வதற்கு நீண்ட காலம் எடுக்கும்.

சில திட்டங்களில் பலன்களைப் பெற 10 ஆண்டுகளுக்கும் மேலாக செல்வதுடன், வருமானத்தை எதிர்வு கூறுவது கடினமாகும். எனவே பிணைப் பத்திரம் வழங்கும் நாடுகள் மற்றைய மதிப்புமிக்க அந்நியச் செலாவணியைக் கண்டறிவதற்கு அல்லது அதிக வட்டி விகிதங்களுடனான பிணைப் பத்திரங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

அவை முதிர்ச்சியடைந்த கடன்களைத் திருப்பிச் செலுத்துவதுடன், பணத் திரவத் தன்மையை குறைக்கின்றதுடன் மற்றும் சாதாரண பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்கின்றது.

பிணைப்பத்திரத்தை வழங்கிய நாடு முதிர்ச்சியடைந்த கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், அது வழுவாகும் நிலைக்கு ஆளாவதுடன், அது எதிர்கால நிதியுதவிகளை பெறுவது மிகவும் கடினமாகிவிடும்.

சர்வதேச நிதி மூலதனம் பொதுவாக EM களின் முதிர்ச்சியடைந்த பொருளாதார செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதுடன் அவர்கள் எதிர்கொள்ளும் பணத் திரவத்தன்மை சவால்களை போதுமான அளவு நெகிழ்வாகவும் பொறுத்துக்கொள்ளக்கூடியதாகவும் இருப்பதில்லை.

குறைவான மதிப்பீடுகள் மற்றும் அதிகரித்த அபாயங்கள் போன்ற சந்தை காரணிகள், அரசாங்கங்கள், பல்தரப்பு வங்கிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்தான இருதரப்பு அல்லது பல்தரப்பு கடன்களுடன் ஒப்பிடும்போது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளால் வழங்கப்படும் ISBகளின் குறுகிய முதிர்ச்சியடைதலுக்கு பங்களிக்கின்றன.

EM களில் வணிகப் பிணைப் பத்திரங்கள் அதிக அளவில் இருப்பதன் விளைவாக, கடன் சேவைச் செலவீனங்கள் அதிகரித்துள்ளதுடன் நிதியியல் உறுதித்தன்மை குறைவடைந்துள்ளது. கிடைக்கக்கூடிய பணத் திரவத்தன்மையின் குறைவு பேரினப் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஒரு குறிப்பான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

கடனைத் திருப்பிச் செலுத்துவதின் உச்சநிலையில் மீள்நிதியளிப்பு செய்ய முடியாத ஒரு கடனாளி நாடு, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அதிகளவான அந்நியச் செலாவணி இருப்புக்களை பயன்படுத்த வேண்டியிருக்கும், இது பொதுச் செலவினங்களில் திடீர் குறைப்பு மற்றும் தேசிய அபிவிருத்திக்கான பேரழிவு விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

அரசின் செலவினங்கள் திடீரென குறைக்கப்படும்போது, உட்கட்டமைப்பு கட்டுமானங்களும், பொதுத் திட்டங்களும் தேக்கமடைந்து, ஏற்கனவே உள்ள முதலீடுகளை திரும்பப் பெற முடியாது.

பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் அரசாங்கத்தின் வழிமுறைகள் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒட்டுமொத்த சமூக வெளியீடு குறைவடைவதுடன் வேலையின்மை விகிதம் அதிகரிக்கிறது; சாதாரண பொருளாதார ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்து, திவால் நிலை மற்றும் வழுவாகும் நிலை பரவலடைகின்றது.

கடனைத் திருப்பிச் செலுத்தும் உச்ச நிலை மற்றும் மீள்நிதியளிப்பதில் உள்ள சிரமம் ஆகியவற்றால் ஏற்படும் பொதுச் செலவினங்களில் திடீர்க் குறைப்பு, உட்கட்டமைப்பை அவசரமாக மேம்படுத்த வேண்டிய மற்றும் நல்ல கைத்தொழிற்துறை அமைப்பு இல்லாத அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார கட்டமைப்பு உருமாற்ற முயற்சிகளை முடிவுக்குக் கொண்டுவரும்.

பண திரவத்தன்மை நெருக்கடிக்குப் பிறகு, துல்லியமான முடிவுகளை பெற்றுக்கொள்ள நீண்ட காலமெடுக்கும். இது ஏற்கனவே ஆர்ஜென்டினா மற்றும் ஈக்வடார் உட்பட பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளை நிலைத்தன்மையற்ற பொருளாதார வளர்ச்சியின் தீய சுழற்சியில் விழச் செய்துள்ளது.

ISB நிதியங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை, மேலும் அவை உற்பத்தி திறனற்ற செலவினங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி முதலீட்டாளர்கள் கவலைப்படுவதில்லை.

முதலீட்டு அபாயமானது நாட்டின் பேரினப் பொருளாதார சூழ்நிலையால் மட்டுமே அளவிடப்படுவதுடன், நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் கவனம் செலுத்தாமல் அதிகமான விலையிடல்கள் மற்றும் அதிகரித்த வட்டி விகிதங்களில் இருந்து லாபம் பெற முயல்கின்றனர்.

இத்தகைய சுதந்திரத்தின் விளைவாக, நிதி இடைவெளிகளை நிரப்புவதற்கு அல்லது உறுதியற்ற அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளைக் கொண்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் குறுகிய கால அரசியல் இலக்குகளுக்கு நிதியளிப்பதற்காக பிணைப்பத்திரங்கள் பயன்படுத்தப்படலாம்.

இதன் விளைவாக, உற்பத்தி திறனான மற்றும் இலாபகரமான திட்டங்களில் முதலீட்டைப் புறக்கணிக்கும் போது, மக்கள் "தங்கள் ஆற்றலுக்கு அப்பால் வாழ்கிறார்கள்" என்பதுடன், இது நீடித்து நிலைக்க முடியாத நீண்ட காலப் பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும்.

இதற்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணமாகும். 2015 மற்றும் 2019 க்கு இடையில், எந்த அபிவிருத்தித் திட்டமும் இல்லாமல் நாடு 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளியிட்டது.

கொள்கை பரிந்துரைகள்

இந்த எல்லா காரணங்களுக்காகவும், ISB களை வழங்கும் போது EM கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாடுகள் நன்கு திட்டமிடப்பட்ட முதலீடுகளை நிறைவுசெய்வதற்கு ISBகளை வழங்க வேண்டும். நீண்ட கால முதலீடுகளுக்கான இருதரப்பு கடன் விருப்பங்களை அரசாங்கம் தேட வேண்டும்.

இலங்கை மற்றும் சுரினாம் ஆகியவை ISB வெளிப்பாடு அதிகளவில் உள்ள நாடுகளாகும். பிணைப் பத்திர சந்தைகள் இத்தகைய நிகழ்வுகளுக்கு அதிகமான உணர்திறன் கொண்டவையாக இருப்பதால், அத்தகைய நாடுகள் ஒரு நிலையான சமூக பொருளாதார சூழலை பராமரிக்க வேண்டும்.

அவர்கள் நற்சுழற்சியைத் தூண்டுவதற்கு கடன் சேவை காலக்கெடுவுடன் சரியாகக் கணிக்கப்பட்டு ஒத்திசைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை உருவாக்குவதன் மூலம் தங்களின் ISB தொகுதிகளை பன்முகப்படுத்த வேண்டும்.

ஒரு பொருளாதாரம் அமெரிக்க டொலரை அதிகமாக நம்பியிருந்தால் வெளிநாட்டு நாணய ஏற்ற இறக்கங்களால் அதிகம் பாதிக்கப்படும். இது போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கீழிருந்து மேலான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். நாடுகளின் தொழிற்துறை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை பன்முகப்படுத்துவதும் முக்கியமானதாகும்.

நிறுவனங்களை மற்ற நாடுகளில் விரிவுபடுத்த ஊக்குவிப்பது இணையாக முக்கியமானதாகும். இத்தகைய பல்தரப்பட்ட நாடுகளுக்கு இடையே எல்லை தாண்டிய குடியேற்ற வழித்தடங்கள் அமைக்கப்பட வேண்டும். நாடுகள் தங்கள் வரவுகளை முகாமை செய்வதற்கு சிறந்த மூலதனக் கட்டுப்பாடுகளை செயற்படுத்த வேண்டும்.

கசுன் திலின காரியவசம் சுவீடனில் நிதி முகாமைத்துவத் துறையில் பணியாற்றும் பேரினப்பொருளாதார நிபுணராவார். அவரை kasunkt@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.