குருநாகலில் அஷ்ரஃபின் 19ஆவது நினைவேந்தல் நிகழ்வு

குருநாகலில் அஷ்ரஃபின் 19ஆவது நினைவேந்தல் நிகழ்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 19ஆவது நினைவேந்தல் நிகழ்வு நாளை (16) திங்கட்கிழமை குருநாகல், சியம்பலாகஸ்கொடுவ ரிச்வின் வரவேற்பு மண்டபத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெறவுள்ளது.

முதல் அமர்வாக காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை “வினைத்திறன்மிக்க குத்பாக்கள்” எனும் தொனிப்பொருளில் கதீப்மார்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. ஜாமிஆ நளீமிய்யா சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேய்க் எஸ்.எச்.எம். பழீல், இப்னு உமர் ஹதீஸ் உயர் கற்கைபீட பிரதி அதிபர் அஷ்ஷேய்க் முப்தி ரியாஸ் ஆகியோர் இதில் விரிவுரையாளர்களாக கலந்துகொள்கின்றனர்.

இரண்டாவது அமர்வாக பிற்பகல் 3:30 மணிக்கு “பெருந்தலைவர் நினைவேந்தல்” நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில், அபிவிருத்தி கற்கைகள் மையத்தின் பணிப்பாளர் கலாநிதி றவூப் ஸெய்ன் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அத்துடன் அஷ்ரஃப் பற்றி நினைவேந்தல் பாடல்களும் காணொளிகளும் அரங்கேற்றப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.