கொரோனா வைரஸ்: செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் அன்பளிப்பு

கொரோனா வைரஸ்: செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அங்கிகள் அன்பளிப்பு

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு அவசியமான பாதுகாப்பு அங்கிகள் நேற்று (28) செவ்வாய்க்கிழமை அன்பளிப்பு செய்யப்பட்டன.

இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்துடன் இணைந்து A Quint Ondaatje Foundation இனால் இந்த பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டன.

கொழும்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்கள், புகைப்பட பிடிப்பாளர்கள் மற்றும் வீடியோ கிராபார் ஆகியோருக்கு இந்த பாதுகாப்பு அங்கிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இந்த நிகழ்வு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் இடம்பெற்றது. கொரோனா வைரஸ் தொடர்பாக களச்  செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்கள் எந்தவித பாதுகாப்பு அங்கிகளுமின்றியே ஈடுபடுகின்றனர்.

இதனால் இந்தியாவில் 100க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்ததக்கது.

இதனையடுத்து இலங்கை தொழில்சார் விளையாட்டு ஊடகவியலாளர் சங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை அடுத்து கொரோனா வைரஸ் தொடர்பாக களச்  செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களுக்கு 30 பாதுகாப்பு அங்கிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.