சர்வதேச ஒப்பந்தங்களினால் நாடு இழந்த வளங்களை மீளப் பெரும் போராட்டம் தொடரும்: பிரதமர்

சர்வதேச ஒப்பந்தங்களினால் நாடு இழந்த வளங்களை  மீளப் பெரும் போராட்டம் தொடரும்: பிரதமர்

சர்வதேச ஒப்பந்தங்கள் மூலம் நாட்டிற்கு இழக்கப்பட்ட வளங்களை எதிர்கால சந்ததியினருக்கு மீண்டும் பெற்றுக் கொடுப்பதே எனது உறுதிப்பாடு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மஹியங்கனை பிரதேசத்தில் இன்று (18) சனிக்கிழமை  காலை இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஒப்பந்தம் ஒன்றில் இருந்து விலகுவது இலகுவான விடயமல்ல. சிரமத்திற்கு மத்தியலாவது நாட்டின் வளங்களை எதிர்கால சந்ததியினருக்கு பெற்றுக் கொடுக்கும் போராட்டத்தை கைவிட மாட்டேன் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மஹியங்கனை உட்பட நாடு முழுவதும் விவசாய உற்பத்திகளை அதிகரித்து, உள்நாட்டு சந்தைகளுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் விவசாய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதாக இங்கு பிரதமர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

உலகில் முதல் முறையாக முப்படையினரை ஈடுபடுத்தி கொவிட்- 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்ளை தனிமைப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை ஜனாதிபதியினாலே முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"வளர்ச்சி என கருதப்படும் மேற்கத்திய நாடுகளில் நடு வீதிகளில் மக்கள் உயிரிழக்கும் நிலைமை ஒன்று இந்த வைரஸ் காரணமாக ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, இந்த நாட்டில் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணுவதற்கு முன்னர் செயலணியை உருவாக்கி வைரசை கட்டுப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கையை மேற்கொண்டமையினால் கொவிட் 19 வைரஸிற்கு இலங்கை முகம் கொடுக்க முடிந்தது.

ஆபத்தான நிலைமை ஒன்று உலக சமூகத்திற்கு காணப்படுவதால் தொடர்ந்து சுகாதார ஆலோசனைகளை பின்பற்றவும். கடந்த நவம்பர் மாதம் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டின்  அபிவிருத்தி நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க ஆதரவு வழங்க கூடிய பெரும்பான்மை நாடாளுமன்றம் இல்லை

இதனால் அபிவிருத்தி திட்டங்களை முன்னோக்கி கொண்டு சென்று நாட்டை அபிவிருத்தி செய்ய கூடிய முறையில் நாடாளுமன்றம் ஒன்றை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இம்முறை பொது தேர்தலில் மூன்றில் இரண்டு அதிகாரம் கொண்ட வெற்றியை பெற்று தரவும்" என்றார்.