சுதேச மருத்துவத் துறையில் இந்திய - இலங்கை ஒத்துழைப்பு

சுதேச மருத்துவத் துறையில் இந்திய - இலங்கை ஒத்துழைப்பு

மாற்றீட்டு மருத்துவ முறைமைகளில் ஒத்துழைப்பினை வலுவாக்குவது குறித்து இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு பிரிவுக்கான முதல் செயலர் டாக்டர். சுஷில் குமார் மற்றும் சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி புஸ்பலதா மனிகே ஆகியோரிடையேயான இந்த சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.

சுகாதார நிபுணர்களுக்கான இணைய வழி பயிற்சிகள், சுகாதார பராமரிப்புப் பொருள் விநியோகம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ அபிவிருத்தியும், ஆராய்ச்சியும் ஆகியவற்றுக்கான நிலையக் கட்டமைப்புக்கான ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

முன்னதாக கடந்த மாதம் இலங்கையின் அரச ஹோமியோபதி மருத்துவமனைக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஒரு தொகுதி ஹோமியோபதி மருந்துப்பொருட்களை வழங்கியிருந்தது.

அத்துடன் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் ஆயுள்வேதம், யோகா, யுனானி, சித்த மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவ துறைகளில் பணியாற்றும் சுகாதார துறைசார் பணியாளர்களுக்கு இந்தியாவில் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.

சுகாதார பராமரிப்புப் பொருள் விநியோகம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ அபிவிருத்தியும் ஆராய்ச்சியும் ஆகியவற்றுக்கான நிலையக்கட்டமைப்புக்கான ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியிருந்தனர்.