றிஸ்வி முப்தி – சீன பதில் தூதுவர் சந்திப்பு

றிஸ்வி முப்தி – சீன பதில் தூதுவர் சந்திப்பு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தியிற்கும் இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹுவியிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தில் நேற்று (29) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் 1ஆம் புனித ஹஜ் பெருநாளை இலங்கை முஸ்லிம்கள் கொண்டாடவுள்ளதற்கான வாழ்த்தினை  சீன தூதுவராலயம் இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.