அலி சப்ரி ரஹீமை எம்.பி பதவியிலிருந்து நீக்க ஐக்கிய தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை

அலி சப்ரி ரஹீமை எம்.பி பதவியிலிருந்து  நீக்க ஐக்கிய தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை

தங்கம் கடத்திய குற்றச்சாட்டுக்குள்ளான அலி சப்ரி ரஹீமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். நயீமுல்லாஹ் இணக்கம் வெளியிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கமையஇ கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்  சட்டத்தரணியொருவர் ஆஜராவதற்கான பதிலியொன்றும் (Pசழஒல) பிரதிவாதிகளில் ஒருவர் என்ற அடிப்படையில் நயீமுல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பதிலி நயீமுல்லாஹ்வின் சட்டத்தரணி ஊடாக கொழும்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 11ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிபதி முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஐக்கிய தேசிய கூட்டமைப்புடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேற்கொண்ட தீர்மானத்தின் பிரகாரம்இ புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக அலி சப்ரி ரஹீம் தெரிவுசெய்யப்பட்டார்.

எனினும் தங்கம் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் அலி சப்ரி ரஹீமை கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அண்மையில் தீர்மானித்தது.  

இது தொடர்பிலான அறிவிப்பு கடந்த நவம்பர் 4ஆம் திகதி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். நயீமுல்லாஹ்விற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன்இ பாராளுமன்ற செயலாளருக்கு உடனடியாக அறிவித்து அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை வறிதாக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தது.

இவ்வாறான நிலையில் மேற்படி இரண்டு கட்சிகளினதும் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு எதிராக 14 இடைக்கால தடை உத்தரவினை பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம் கடந்த 13ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். நயீமுல்லாஹ்வினை கடுமையாக விமர்சித்தமை குறிப்பிடத்தக்கது.