இலங்கைக்கான பாக். உயர் ஸ்தானிகராக Saad Kattak நியமனம்

இலங்கைக்கான பாக். உயர்  ஸ்தானிகராக Saad Kattak நியமனம்

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் Mohamed Saad Kattak நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கத்தினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 35 வருட இராணுவ அனுபவத்தினைக் கொண்ட இவர், பாகிஸ்தானின் முரண்பாடுகள் மற்றும் பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் தவிசாளராக தற்போது செயற்படுகின்றார்.

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் விரைவில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ள இவர், அண்மையில் பாகிஸ்தான் ஜனாதிபதியினை சந்தித்து இலங்கை – பாகிஸ்தான் உறவு தொடர்பில் விரிவாக கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.