புதிய இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் பதவிப் பிரமாணம்

புதிய இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் பதவிப் பிரமாணம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்திஇ மனைசார் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சராக இன்று (06) செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று காலை  பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வு இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

தபால் சேவைகள் மற்றும் ஊடக மேம்பாட்டு இராஜாங்க அமைச்சராக இவர் செயற்பட்டு வந்த நிலையிலேயே குறித்த இராஜாங்க அமைச்சில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டு புதிய இராஜாங்க அமைச்சு பதவி இவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.