தகவல் அறியும் உரிமை சட்டத்தினை நீக்க வேண்டும்: கல்முனை மேயர்

"தகவல் அறியும் உரிமை சட்டத்தினை அரசியலமைப்பிலிருந்து  நீக்கப்பட வேண்டும்  செய்ய வேண்" என கல்முனை மேயரான சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக கொண்டுவரப்பட்ட இந்த விடயத்தினை 20ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக இல்லாமல் செய்திருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர சபையில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றிலேயே மேயர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,  

"இந்த சட்டம் வீணானதொரு தொல்லையாக உள்ளது. நிர்வாக ரீதியாக உள்ளவர்களுக்கு இது தொடர்பில் தெரியும். குறித்த சட்டத்தின் ஊடாக கண்டதையெல்லாம் கேட்டகின்றனர். இதற்கு பதில் வழங்குவதற்காக ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளது.

நிர்வாகத்தினை கொண்டு செல்வதற்கு இதனால் மிகப் பெரிய  இடையூறு உள்ளது. இந்த சட்டத்தினை புத்திஜீவிகள் பயன்படுத்துவதாக நான் காணவில்லை.  மாறாக நிர்வாகத்தில் இருப்பவர்களை பழிவாங்கும் நோக்கிலும்  இடைஞ்சல் ஏற்படுத்தும் நோக்கிலும் இதனை பயன்படுத்துகின்றனர்" என்றார்.