நிச்சயம் MMDA இல் திருத்தம் செய்யப்படும்: அலி சப்ரி

நிச்சயம் MMDA இல் திருத்தம் செய்யப்படும்: அலி சப்ரி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் முஸ்லிம் திருமண மற்றும் விவாக திருத்தச் சட்டத்தில் (MMDA) நிச்சயம் திருத்தம் மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

முஸ்லிம் திருமண மற்றும் விவாக திருத்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக 1970 இல் நியமிக்கப்பட்ட பாறுக் குழுவினாலும், 1980 இல் நியமிக்கப்பட்ட சஹாப்தீன் குழுவினாலும்,  2009 இல் நியமிகக்ப்பட்ட சலீம் மர்சூப் குழுவினாலும் எந்தவித மாற்றத்தினை மேற்கொள்ள முடியவில்லை என அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

எனினும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிச்சயம் முஸ்லிம் திருமண மற்றும் விவாக திருத்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியாக குறிப்பிட்டார்.

சட்டம் நிறைவேற்றுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் அமைச்சரவைக்கே உள்ளது. காதி நீதிமன்றத்தினை நீக்குவதற்கு அமைச்சரவையே தீர்மானத்ததாக அவர் கூறினார்.

இந்த திருத்தங்கள் தொடர்பான சட்டமூலத்தின்  வரைபினை வர்த்தமானியில் வெளியிடப்படும். இதற்கு விருப்பம் இல்லாதாவர்கள் உயர் நீதிமன்ற்தத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிடும் போதே நீதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.