பாக். உயர் ஸ்தானிகராலய வர்த்தக இணைப்பாளர் - காலி மாவட்ட வர்த்தக சம்மேளனம் சந்திப்பு

பாக். உயர் ஸ்தானிகராலய வர்த்தக இணைப்பாளர்  - காலி மாவட்ட வர்த்தக சம்மேளனம் சந்திப்பு

கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் வர்த்தக மற்றும் முதலீட்டு இணைப்பாளர் அஸ்மா கமால், காலி மாவட்ட வர்த்தக மற்றும் தொழில்துறை அலுவகத்திற்கு விஜயம் செய்து அதன் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதன் முக்கிய உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது, காலி பிராந்தியத்தின் தேயிலை மற்றும் வாசனைத் திரவியப் பொருட்கள் (மசாலா) ஏற்றுமதியில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதோடு, மருந்து வகைகள், சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற  துறைகளில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.