2020 இல் ஜனாதிபதி ஊடக விருது விழா

2020 இல் ஜனாதிபதி ஊடக விருது விழா

ஜனாதிபதி ஊடக விருது விழா – 2022 இனை நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெகுசன ஊடக அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு நேற்று (15) திங்கட்கிழமை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

'சுபீட்சத்தின் நோக்கு' அரசாங்க கொள்கைப் பிரகடனத்தின் மூலம், 21ஆம் நூற்றாண்டுக்கு பொருத்தமான சமுதாயத்தை உருவாக்குவதற்காகவும், கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகவும் உயரிய ரீதியில் செயற்படக்கூடிய வகையில் வெகுசன ஊடக நிறுவனங்கள் மற்றும் அவற்றில் பணிபுரியும் தொழில்வாண்மையாளர்களின் பணிகளுக்கான சரியானதும் சுதந்திரமானதுமான சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாக அடையாளங் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, வெகுசன ஊடகங்களின் தரநியமத்தை பேணுவதற்காகவும் இலத்திரனியல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் இணையத்தள ஊடகங்களின் உள்ளடக்கம் பொறுப்புக்களுடன் கூடிய சுயாதீனமானதும் அவற்றைப் பயன்படுத்துவோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலும் நடாத்திச் செல்வதற்காக ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜனாதிபதி ஊடக விருது விழாவை மிகவும் முறைசார்ந்த வகையில் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள், இணையத்தளங்கள், பாடசாலை மட்ட ஊடக மற்றும் ஊடக ஆய்வு போன்ற துறைகள் ஆறினை (06) உள்ளடக்கியதாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளிலான 2021 ஆம் ஆண்டின் ஆக்கங்களை அதற்கு அடிப்படையாகக் கொண்டு படைப்பாளிகளை பாராட்டுவதற்காக ஜனாதிபதி ஊடக விருது விழா – 2022 இனை நடாத்துவதற்காக வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.