உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளராக அபுர்ரஹிம் சித்தீக்கி நியமனம்

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான  பணிப்பாளராக அபுர்ரஹிம் சித்தீக்கி நியமனம்

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அபுர்ரஹிம் சித்தீக்கி, தனது நற்சான்றுகளை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கடந்த மே 03ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து கையளித்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கும், உலக உணவுத் திட்டத்திற்கும் இடையிலான நீண்டகால உறவின் 50வது ஆண்டு நிறைவு விழா இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இடம்பெறுகின்றது.

நற்சான்றுகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் குணவர்தன, "முன்னர் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பணிப்பாளராகப் பணியாற்றிய பிரெண்டா பார்டன் சிறந்ததொரு பணியை மேற்கொண்டுள்ளதாகவும்,புதிய பணிப்பாளரிடமிருந்தும் இதேபோன்ற ஒத்துழைப்பை இலங்கை எதிர்பார்ப்பதாகவும்" தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான உலக உணவுத் திட்டத்தின் புதிய பிரதிநிதி அபுர்ரஹிம், "தற்போதுள்ள நெருக்கமான மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இலங்கையும் உலக உணவுத் திட்டமும் இணைந்து செயற்படும்" எனத் தெரிவித்தார்.

 

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு