றிசாத்: பக்தியுள்ள முஸ்லிமே தவிர, தீவிரவாதி அல்ல: மங்கள

றிசாத்: பக்தியுள்ள முஸ்லிமே தவிர, தீவிரவாதி அல்ல: மங்கள

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் ஒரு பக்தியுள்ள முஸ்லிமே தவிர, தீவிரவாதி அல்ல முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேற்கொண்டுள்ள டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் எம்.பி கைது செய்யப்பட்டு இன்றுடன் 30 நாட்கள் கடந்துவிட்டன.

றிசாத் பதியுதீன் 1990களில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் உறுப்பினராக இருந்த காலத்திலிருந்தே, எனக்கு அறிமுகமானவர் என்ற வகையில், அவர் ஒரு பக்தியுள்ள முஸ்லிமாக இருந்தபோதிலும், ஒருபோதும் தீவிரவாதியாக இருக்கவில்லை என்பதை நான் நன்கறிவேன்.

இலங்கையின் மிகவும் திறமையற்ற ஆட்சியின், பிழையான நிர்வாக செயல்முறை மற்றும் தடுமாற்றங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு, றிசாத் பதியுதீன் ஒரு பலிக்கடாவாக பயன்படுத்தப்படுகின்றார்"  என்றார்.

30 days today since Rishad B arrested under PTA. Known RB since he was a SLFP youth member in the ‘90s ;though being a devout Muslim was never, NEVR an extremist. RB is a mere scapegoat to divert attention away from the mismanagement and fumblings of SLs most inefficient regime.

— Mangala Samaraweera (@MangalaLK) May 24, 2021