முஹர்ரம் மாத தலைப் பிறை தென்படவில்லை

 முஹர்ரம் மாத தலைப் பிறை தென்படவில்லை

இஸ்லாமிய புது வருடத்தினை தீர்மானிக்கும் புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தவொரு பிரதேசத்திலும் இன்று (09) திங்கட்கிழமை மாலை தென்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, துல்ஹஜ் மாதத்தினை 30ஆக பூர்த்தி செய்து ஹிஜ்ரி 1443 இன் முஹர்ரம் தலைப்பிறை நாளை (10) செவ்வாய்க்கிழமை மஹ்ரிப் முதல் ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பினை கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகிய கூட்டாக இணைந்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.