சீன சேதனப் பசளை இறக்குமதிக்குத் தடை

சீன சேதனப் பசளை இறக்குமதிக்குத் தடை

இம்முறை பெரும்போக செய்கைக்காக இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்ட நைட்ரஜன் சேதன பசளையை, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப் போவதில்லை என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சீனாவின் உர உற்பத்தி நிறுவனத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட உர மாதிரிகளை பரிசோதிக்கும் போது அதில் மண்ணுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பக்டீரியா இருப்பதாக இரசாயன பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. அதனையடுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இம்முறை பெரும்போக நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு தேவையான உரத்தை பற்றாக்குறையின்றி வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என்றார்.

நாம் பொறுப்பான அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கையின் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த வகையான உரத்தையும் இறக்குமதி செய்யமாட்டோம் என இதற்கு முன்னர் உறுதியளித்ததைப் போன்று, இப்போது செயற்படுகின்றோம் என்றார்.