காலஞ்சென்ற அமைச்சர் மன்சூரின் பெயரை வீதிக்குச் சூட்டுவதில் பொடுபோக்குக் காட்டும் கல்முனை மாநகர சபை

காலஞ்சென்ற அமைச்சர் மன்சூரின் பெயரை வீதிக்குச் சூட்டுவதில் பொடுபோக்குக் காட்டும் கல்முனை மாநகர சபை

காலஞ்சென்ற அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் பெயரை வீதிக்குச் சூட்டுவதில் கல்முனை மாநகர சபை பொடுபோக்குக் காட்டி வருவதாக மாநகர சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கல்முனை மாநகர சபையின் கீழுள்ள வீதியொன்றுக்கு முன்னாள் அமைச்சர் மன்சூரின் பெயரை சூட்டுவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்கள் கழிந்துள்ளன.

எனினும் குறித்த தீர்மானம் இன்று வரை கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்திற்கு அனுப்பப்படவில்லை என கல்முனை மாநகர சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அதேவேளை, கல்முனை மாநகர சபையின் கீழுள்ள வீதியொன்றுக்கு காலஞ்சென்ற அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் பெயரை சூட்டுவது தொடர்பான கோரிக்கை எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் விடியல் இணையத்தளத்திற்கு உறுதிப்படுத்தியது.

கல்முனை, பழைய தபாலக வீதிக்கு முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூரின் பெயரை சூட்டுவதற்கு கல்முனை மாநகர சபை கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஏகமனதாகத் தீர்மானித்தது.

எனினும், சுமார் இரண்டு மாதங்கள் கழிந்துள்ள நிலையிலும் குறித்த வீதியின் பெயர் மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டவில்லை.

இது தொடர்பில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவரை விடியல் இணையத்தளத்தம் தொடர்புகொண்டு வினவிய போது "குறித்த வீதி பெயர் மாற்றம் தொடர்பான கோரிக்கை எதுவும் திணைக்களத்திற்கு முன்வைக்கப்படவில்லை" என்றார்.

கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக காலஞ்சென்ற அமைச்சர் ஏ.ஆர். மன்சூரின் புதல்வாரன ரஹ்மத் மன்சூர் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.