ஊடகவியளாளர் பாறூக் ஷிஹான் விருது வழங்கி கௌரவிப்பு

ஊடகவியளாளர் பாறூக் ஷிஹான்  விருது வழங்கி கௌரவிப்பு

ஊடகவியளாளர் பாறூக் ஷிஹான், KDMC Nenasala Training Centre – Kalmunaiஇனால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிறுவனத்தின் நிகழ்வொன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர் எஸ்.எம். ஹாஜா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இதன்போது, பிராந்திய ஊடகத்துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் பாறூக் ஷிஹான்  விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இப்பட்டமளிப்பு விழாவிற்கு Colombo Lady Ridgeway Hospital for Children வைத்தியசாலையின் முன்னாள் பிரதி பணிப்பாளரும் கல்முனை அபிவிருத்திற்கும் முகாமைத்துவ சபையின் தலைவருமான வைத்திய கலாநிதி ஏ.எல்.எம் நஸீர்   பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.