GMOA இன் தலைவராக அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு

GMOA இன் தலைவராக அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) தலைவராக வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய மீண்டும் இன்று (27) சனிக்கிழமை தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று இடம்பெற்ற போது, எந்தவித போட்டியுமின்றி ஏகமானதாக இவர் தெரிவுசெய்யப்பட்டார்.

கடந்த 10 வருடங்களாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக செயற்படும் இவர் நான்காவது தடவையாக இம்முறை இந்த பதவிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.