இந்தியக் கடற்படைக் கப்பலான ஐராவத் கொழும்புக்கு விஜயம்

இந்தியக் கடற்படைக் கப்பலான ஐராவத் கொழும்புக்கு விஜயம்

இந்தியக் கடற்படைக்கு சொந்தமான அதி நவீன ஷர்துல் வகை தரையிறங்கு கப்பலான (எல்எஸ்டி) ஐராவத் இன்று (18) புதன்கிழமை கொழும்பை வந்தடைந்துள்ளது.

இவ்விஜயத்தின் ஓரங்கமாக இக்கப்பலின் கட்டளை அதிகாரி, தளபதி ரிந்து பாபு அவர்கள் மேற்கு கடற்பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் டி.எஸ்.கே பெரேராவை சந்தித்தார்.

இந்திய அரசாங்கத்தின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் கீழ் இந்திய அரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெறுமதியான பல்வேறு உபகரணங்கள் குறிப்பாக இலங்கை கடற்படைக்கான இயந்திரங்கள் உட்பட இயந்திர சோதனை உபகரணங்கள் மற்றும் பரீட்சார்த்த சாதனங்கள் இந்திய கடற்படையின் வெளியுறவு ஒத்துழைப்பு பிரிவின் உதவி தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் நிர்பை பப்னாவினால் இலங்கை கடற்படையின் பொறியியல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் KWARI ரணசிங்ஹேவிடம் இக்கப்பலில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கையளிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான உதிரிப்பாகங்கள் உரிய நேரத்தில் கிடைப்பது இலங்கையின்  வினைத்திறன் மிக்க செயற்பாடுகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

நட்புறவைக்கொண்டுள்ள அயல் நாடுகளுடனான உறவுகளை வலுவாக்குவதில் நட்புறவுப் பாலங்கள் என்ற சிந்தனையினை அடிப்படையாகக் கொண்டு இந்தியக் கடற்படையின் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்