விடிவெள்ளி, மெட்ரோ நியூஸ் பத்திரிகைகளின் பெயரைப் பயன்படுத்தி போலிச் செய்தி பரப்பல்

 விடிவெள்ளி, மெட்ரோ நியூஸ் பத்திரிகைகளின் பெயரைப் பயன்படுத்தி போலிச் செய்தி பரப்பல்

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்ர் நிறுவனத்திற்கு சொந்தமான விடிவெள்ளி மற்றும் மெட்ரோ நியூஸ் ஆகிய பத்திரிகைகளின் பெயரைப் பயன்படுத்தி சமூகவலைத்தளங்களில் வெளிவரும் போலிச் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு குறித்த பத்திரிகைகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

"கொரோனா ஒரு தேசியப் பிரச்சினை; முஸ்லிம்களுக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது" என சஜித் பிரேமதாச தெரிவித்ததாக விடிவெள்ளி பத்திரிகையில் யின் பெயரைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட செய்தி போலியானது" என குறித்த பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம்.பைரூஸ் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதேவேளை, "அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு பணிந்து போவதாகவும் தமது அரசாங்கத்தில் அது நடக்காது எனவும் முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்ததாக 'மெட்ரோ நியூஸ்' பத்திரிகையின் பெயரைப் பயன்படுத்தி வெளியாகியுள்ள செய்தி போலியானது" என 'மெட்ரோ நியூஸ்' பத்திரிகையின் ஆசிரியர் ஆர்.சேதுராமன் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த போலிச் செய்தி தொடர்பில் தமது நிறுவனம் பொறுப்புடையது அல்ல எனவும், வாசகர்கள் இவ்வாறான போலிச் செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் குறித்த இரு பத்திரிகைகளின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.