ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்

ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பம்

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் சர்வ மத ஆசிர்வாதங்களுடன் நேற்று (13) சனிக்கிழமை கொழும்பில் ஆரம்பமானது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் அபேட்சகர்களான ரவி கருநாயாக்க, பைரூஸ் ஹாஜியார், சுசில் ஹிந்தல்பெட்டிய, Fight Cancer Team ஸ்தாபகர் முஹம்மத் ஹாஜி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த சர்வமத நிகழ்வு வாலுகாராம விகாரை, கங்காராம விகாரை தேவடகஹ பள்ளிவாயல், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், கொட்டாஞ்சேனை சிவன் கோவில் ஆகிய மதஸ் தளங்களில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.