முன்னாள் அமைச்சர் சேகு முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

முன்னாள் அமைச்சர் சேகு முஸ்லிம் காங்கிரஸில் இணைவு

முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன், தனது தாய் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் இணைந்துகொண்டார்.

திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரிக்கும் பிரசாரக் கூட்டமொன்று நேற்று (14) செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்த கூட்டத்திலேயே முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் அக்கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார்.

அக்கரைப்பற்றினைச் சேர்ந்த இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.