மு.கா பொருளாளராக பைசால் காசீம் தெரிவு; ஜெமீல், உதுமாலெப்பைக்கு முக்கிய பதவிகள்

மு.கா பொருளாளராக பைசால் காசீம் தெரிவு; ஜெமீல், உதுமாலெப்பைக்கு முக்கிய பதவிகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளராக பைசால் காசீம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29ஆவது பேராளர் மாநாட்டை முன்னிட்டு, நேற்று (21) வெள்ளிக்கிழமை இரவு கட்சி தலைமயகமான தாருஸ்ஸலாமில் கட்டாய உயர்பீடக் கூட்டம் நடைபெற்றது.

இதன்போதே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் பைசால் காசீம், கட்சியின் பொருளாளர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளராக செயற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.அஸ்லம், கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவராக தெரிவுசெய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ராவுத்தார் நெய்னா முஹம்மது, சுகயீனம் காரணமாக குறித்த பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதாக அறிவுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கட்சியில் அண்மையில் இணைந்துகொண்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் ஏ.எம்.ஜெமீல் ஆகியோருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அண்மையில் பிரிந்து சென்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எம்.மாஹீர் மற்றும் பழீல் பீ.ஏ ஆகியோரின் பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய தெரிவுகள் அனைத்தும் நாளை (23) ஞாயிற்றுக்கிழமை கண்டியில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29ஆவது பேராளர் மாநாட்டில் பிரேரிக்கப்பட்டு, கட்சி உறுப்பினர்களினால் அங்கீகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதவிகளுக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களின் விபரங்கள்:

1.  பொருளார்: பைசால் காசீம் - முன்னாள் இராஜாங்க அமைச்சர்

2.  சிரேஷ்ட பிரதி தலைவர்: எம்.எஸ்.அஸ்லம் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

3.  பிரதி தேசிய அமைப்பாளர்: ஏ.எம்.ஜெமீல் - முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

4.  பிரதி பொருளாளர்: எம்.சீ.எஹியா கான்

5.  போராளர் செயலாளர்: அஹமட் ஹை - முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

6. தொழில் வாய்ப்பு விவகார செயலாளர்: எம்.எஸ்.உதுமாலெப்பை - முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

7.   கல்வி விவகார செயலாளர்:  எம்.அன்வர் - முன்னாள் மாகாண சபை உறுப்பினர்