விடுதலைக்காக உழைத்தவர்களுக்கு அஹ்னப் நன்றி தெரிவிப்பு

விடுதலைக்காக உழைத்தவர்களுக்கு அஹ்னப் நன்றி தெரிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட எழுத்தாளர் அஹ்னப், தனது விடுதலைக்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"இனி வழியே இல்லை எனும் போதுதான் இறைவன் வழியையே திறக்கிறான்.

உங்கள் இறைவனுக்கு நீங்கள் நன்றி செலுத்தினால் அவன் அருட்கொடைகளை அதிகப்படுத்துவான். இன்னும் நீங்கள் அவனுக்கு மாறு செய்தால் அவனது வேதனை மிகக் கடினமானது என இறைவன் கூறியதை நபியே கூறுவீராக. (அல்க்குர்ஆன் 13:7)

எனவே பேரருளைச் சொரியும் தன்னிகரில்லா ஓரிறைவனுக்கே சர்வ புகழும் அல்ஹம்துலில்லாஹ். யார் மனிதனுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவர் இறைவனுக்கு நன்றி செலுத்தாமாட்டார். அதற்கிணங்க நான் இவ்விடத்தில் நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

உலகத்துக்கு சிறைக்கூடமாக இருந்த போதும் இலங்கைச் சிறுபான்மைக்கு வதை கூடமாக இருக்கின்ற பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான தடுப்புக்காவலிலும், விளக்கமறியலிலும் தோராயமாக ஒன்றரை வருடத்தை தொலைத்துவிட்டு தற்போது தற்காலிக விடுதலையை நான் பெற்றிருக்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

எனவே எனது தற்காலிக விடுதலைக்குப் பின்னால் சட்டத்தரணிகளின் பகீரத பிரயெத்தனம், இன்னும் பல நண்பர்களின் பேருழைப்பு, முன்னறிமுகமில்லாத பலரின் அர்ப்பணிப்பு, என் குடும்பத்தாரின் விடாமுயற்சி, எனது எழுத்துக்களையும் என்னையும் நேசித்த ஆசித்தோரின் எனக்கான பிரார்த்தனை, எதற்கும் அஞ்சாத என் தம்பியின் துணிவு, என் மீதான பேராசிரியர்களின் அக்கறை, மனிதம் வாழ வேண்டும் என்பதற்காக வாழும் மகோன்னத மனிதர்களின் பொருளாதார, ஆற்றல், உடல் ரீதியான உதவிகள், பிரார்த்தனைகள் எனப் பல தியாகங்கள் பொதிந்து கிடக்கின்றன.
அந்த வகையில் முதலில் சட்டத்தரணிகள் நன்றிக்குரியவர்கள்.

1. Dr. Kanag Iswaran (PC)
2. Mr. A.A.M Illiyas (PC)
3. Mr. Lakshmanan Jeyakumar
4. Mr. Sanjay Wilson Jaysekara
5. Miss. Swasthika Arulingam
6. Mr. S. Dev Devapalan
7. Mr. Jayantha Dehiattage
8. Mr. Ramalingam Ranjan
9. Mr. Nuhman
10. Mr. Tharindhu Rathnayaka
11. Mr. Husni Rajih
12. Mr. Sajjadh

அடுத்ததாக எனக்காக குரல் கொடுத்தவர்களில் முதன்மையானவர்களுக்கு விசேடமாக நன்றி நவில்கிறேன்.
1. Action Committee For The Defence Of Freedom Of Art And Expression
2. world Socialist Web Site (WSWS.ORG)

மேலும் Free Ahnaf Jazeem WordPress தளத்தின் நிறுவனர்களுக்கு நன்றிகள்.
1. Mr. Vajra Chandhrasekara
2. Mr. Lohan Gunaweera

மேலும் எனது நவரசம்   நூலினை ஆங்கில , சிங்கள மொழிகளில் மொழிபெயர்த்தோர் மற்றும் நூல் பற்றி கருத்து தெரிவித்தோருக்கும் நன்றிகள்.
1. Prof. Sumathy Sivamohan
2. Dr. Mahendran Thiruvarangan
3. Prof. Dr. M.A.  Nuhman
4. Mr. Somasuntharam Pathmanathan
5. Shash Trevett
6. Nedra Rodrigo
7. Ramzy Razeek
8. Sakeef Saam

மேலும் எனக்காக கையொப்பமிட்டு எனக்கு ஆதரவளித்த 96 பேராசிரியர்களுக்கும் எனது நன்றிகள். இன்னும் எனக்காக யார் யாரெல்லாம் குரல் கொடுத்தார்களோ அவர்களுக்கும் எனது நன்றிகள்.

அடுத்ததாக எனக்காக குரல் கொடுத்த சர்வதேச நிறுவனங்களுக்கும் நன்றிகள்.
1. Pen International
2. Amnesty International
3. The Sri Lanka Compaign For Peace and Justice
4. Journalist For Democracy  In Srilanka
5. The International Working Group On Sri Lanka
6. Internatonal Truth And Justice Project - Srilanka
7. The Center For Justice And Accountability
8. Australian Center For International Justice
9. Article 19
10. Human Right Watch
11. IMADR
12. PEARL
13. Freemuse
14. Freedom Now
15. South Asians For Human Right

அத்தோடு‌ எனக்காக குரல் கொடுத்த ஊடகங்களையும் என்னால்  மறந்துவிட முடியாது அந்த வகையில் அவர்களுக்கும் எனது நன்றிகள். மற்றும் எனது குடும்பத்துடன் கூடவே இருந்து நேரங்காலம் பாராது விடுதலைக்காக உழைத்த மாமா #Zakey_Mahmood அவர்களுக்கும் எனது நன்றிகள்.

தொடர்ச்சியாக இராமனுக்கு எப்படி இலக்குவன் என்றும் கூடவே துணையாக இருந்து நிழலாய் காத்தானோ அதுபோல எனக்கும் இருக்கிறான்; #Afham_Jazeem அவனுக்கும் எனது நன்றிகள்.  எல்லாவற்றிற்கும் மேலாக எனக்காக தினம் தினம் பிரார்த்தித்த உறவுகளுக்கும், தோழர்களுக்கும்  கோடானு கோடி நன்றிகள். ஜஸாக்கல்லாஹு ஹைர்.

நான், #Hijaz_Hezbullah, #Ramzy_Raeek, #Aasath_Saley போன்ற ஒரு சிலரின் விடுதலையுடன் மாத்திரம் மனித உரிமை மீட்டெடுக்கப்பட்டதாக நாம் நினைப்பது மனித உரிமையை பாதுகாத்து ஆகாது.

எனவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இருக்கின்ற அத்தனை தமிழ், முஸ்லிம் அரசியல் கைதிகளையும் விடுவித்து, இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதன் மூலம் மாத்திரமே மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க முடியும்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் (ICCPR) இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. எனவே வாழ்க்கைக்கான உரிமை, கருத்து வெளிப்பாடு மற்றும் மனச்சாட்சிக்கான உரிமை, தன்னிச்சையான கைது மற்றும் தடுத்து வைப்பிலிருந்து விடுதலை பெறுவற்கான உரிமை, சித்திரவதை மற்றும் மோசமாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை, நீதியான வழக்கு விசாரணைக்கான உரிமை என்பன எமக்கு இருக்கிறது என்பதையும் நான்  குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன்.

எனவே இன, மத, மொழி பேதங்களை கடந்து நாம் யாவரும் மனிதர்கள் என்ற அடிப்படையில் சமத்துவம், சட்டவாட்சி, ஜனநாயகம், மனித உரிமை ஆகியவற்றைக் காக்க ஒன்றிணைய வேண்டும். மேலும் இனவாதம், முதலாளித்துவ ஒடுக்கு முறைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும் என அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி ஆங்கே புல்லுக்கு பொசியுமாம் - தொல்லுலகில் நல்லவர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை

- ஔவை பிராட்டியார் -

நன்றி

Ahnaf Jazeem
(மன்னாரமுது அஹ்னப்)