சவூதி தூதுவராலயம் கொள்ளுப்பிட்டிக்கு இடமாற்றம்

சவூதி தூதுவராலயம் கொள்ளுப்பிட்டிக்கு இடமாற்றம்

இலங்கைக்கான சவூதி அரேபியா தூதுவராலயம் தற்போது  கொள்ளுப்பிட்டிக்கு இடமாற்றப்பட்டுள்ளது.

கடந்த பல வருடங்களாக கொழும்பு - 07, ஹோர்ட்டன் பிளேசில் இயங்கி வந்த சவூதி அரேபியா தூதுவராலயம், தற்போது இல. 86, காலி வீதி, கொள்ளுப்பிட்டி, கொழும்பு - 03 எனும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது.

காலி வீதியின் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள அமெரிக்கா தூதுவராலயம் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றுக்கு மத்தியிலும் சினமன் கிரேன்ட் ஐந்து நட்சத்திர ஹோட்டேலுக்கு முன்பாகவுமே சவூதி அரேபிய தூதுவராலயம் தற்போது செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.