முகுது மாகா விகாரைக்கு தொல்பொருளியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் விஜயம்

பொத்துவில் முகுது மாகா விகாரைக்கு தொல்பொருளியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் செனரத் திசாநாயக்க கடந்த புதன்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்ன அண்மையில் இந்த விகாரைக்கு விஜயமொன்றினை மேற்கொண்டு குறித்த விகாரைக்கான காணி அபகரிப்பு தொடர்பில் கலந்துரையாடினார்.

குறித்த விஜயத்தின் தொடராகவே தொல்பொருளியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் விஜயம் அமைந்துள்ளது. இந்த சந்திப்பில் அம்பாறை மாவட்ட செயலாளரும் கலந்துகொண்டார்.

இதன்போது, முகுது மாகா விகாரைக்கு சொந்தமான காணி அபகரிப்பு தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.